உடுதெனிய தாக்குதல் சம்பவ அப்டேட் ..கண்டி உடுதெனிய  பகுதியிலிருந்து தெல்தொட்ட பகுதி நோக்கி ஆட்டோவில் சென்று கொண்டிருந்த
2 முஸ்லிம்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சுமார் 50 பேரடங்கிய  கூட்டத்தினால்  குடுகல பகுதியில் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்கிறது.

காயமடைந்த 2 முஸ்லிம்கள் தற்போது வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.அத்துடன் குறித்த 2 முஸ்லிம்கள் பயணித்த ஆட்டோவுக்கும் சேதம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அறியவருகிறது.

குடுகல பகுதியில்  ஆட்டோவில் சென்று கொண்டிருந்த முஸ்லிம் இளைஞர்கள் மீது  தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் அதேவேளை இவர்களில் 2 இராணுவத்தினரும் உள்ளடங்குவதாக அறியவந்துள்ளது.

பொலிஸார் துரிதமாக செயற்பட்டதனாலேயே, இந்த வன்முறையுடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் இச்சம்பவம் தொடர்பில் வேறொரு விடயமும் பிரதேச பொதுமக்கள் சிலரால் தெரிவிக்கப்படுகிறது. அதாவது குறிப்பிட்ட முஸ்லிம் இளைஞர்கள் அந்த சிங்கள இளைஞர்களுடன் தொடர்பு பட்டவர்கள் எனவும் அவர்களுக்குள்  ஏற்பட்ட  முறுகல்கள்தான் இந்த தாக்குதலின் பின்னனி எனவும் தெரிவிக்கின்றனர். 

மேலும் இந்த சம்பவத்தில்  இரண்டு சிங்கள இளைஞர்களும் குறிப்பிட்ட கும்பலால் தாக்கப்பட்டதாக தெரிவிக்கின்றனர்.

முஸ்லிம் இளைஞர்கள் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஒருவர், பொலிசாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே ஏனையவர்கள் கைது செய்யப்பட்டமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
உடுதெனிய தாக்குதல் சம்பவ அப்டேட் ..  உடுதெனிய தாக்குதல் சம்பவ அப்டேட் .. Reviewed by Madawala News on April 16, 2018 Rating: 5