கொழும்பு 2 இல் 700 பேர் வாழும் ஒரு குடியிருப்பின் நிலை.


-எம்.எம்.மின்ஹாஜ், எம்.ஆர்.எம்.வஸீம்-
கொழும்பு 2, ஸ்டுவர்ட் வீதியில் அமைந்­துள்ள வேகந்த பொது மக்கள் குடி­யி­ருப்பு கட்­ட­டத்­தொ­குதி
மிகவும் ஆபத்­தான நிலை­மையை அடைந்­துள்­ளது. ஆகவே குறித்த குடி­யி­ருப்பில் வசித்து வரும் அனை­வ­ரையும் உடன் வெளி­யேற்­று­மாறும் அங்கு வாழும் குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்கு பாது­காப்­பான இட­மொன்றை பெற்­றுக்­கொ­டுக்­கு­மாறும் அனர்த்த முகா­மைத்­துவ பதில் அமைச்சர் ரஞ்ஜித் சியம்­ப­லா­பிட்­டிய அதி­கா­ரி­க­ளுக்கு ஆலோ­சனை விடுத்தார்.

கொழும்பு 2, ஸ்டுவர்ட் வீதியில் அமைந்­துள்ள வேகந்த பொது மக்கள் குடி­யி­ருப்பு கட்­ட­டத்­தொ­குதி தொடர்பில் நேற்று அனர்த்த முகா­மைத்­துவ அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடை­பெற்ற விசேட கலந்­து­ரை­யா­டலில் போதே அமைச்சர் மேற்­கண்­ட­வாறு ஆலோ­சனை விடுத்தார்.

இந்த கலந்­து­ரை­யா­டலின் போது உரை­யாற்­றிய அமைச்சர்,
1974 ஆம் ஆண்டு காலப்­ப­கு­தியின் போதே கொழும்பு 2 , வேகந்த பொது மக்கள் குடி­யி­ருப்பு கட்­டடம் நிர்­மா­ணிக்­கப்­பட்­டது. இந்த குடி­யி­ருப்பு கட்­டத்­தொ­கு­தியில் 114 குடும்­பங்கள் பதிவு செய்­த­வர்­க­ளாக காணப்­ப­டு­கின்­றன. மேல­தி­க­மாக 36 குடும்­பங்கள் சட்­ட­வி­ரோ­த­மான முறையில் வசித்து வரு­கின்­றன. இதன்­படி மொத்­த­மாக 700 பேர் குறித்த கட்­ட­டத்­தொ­கு­தியில் வாழ்ந்து வரு­கின்­றனர்.

இந்­நி­லையில் 2012 ஆம் ஆண்டு கட்­டட ஆராய்ச்சி நிறு­வனம் முன்­னெ­டுத்த விசேட பரி­சோ­த­னையின் பிர­காரம் குறித்த கட்­ட­டத்­தொ­குதி பெரும் ஆபத்­துக்குள்­ளா­கி­யி­ருப்­ப­தாக குறித்த நிறு­வனம் தனது அறிக்­கையின் மூலம் உறு­திப்­ப­டுத்­தி­யது.

இந்த விவ­காரம் தொடர்பில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன விசேட அவ­தானம் செலுத்­தி­யுள்ளார். ஆகவே,

கொழும்பு 2, ஸ்டுவர்ட் வீதியில் அமைந்­துள்ள வேகந்த பொது மக்கள் குடி­யி­ருப்பு கட்­ட­டத்­தொ­குதி மிகவும் ஆபத்­தான நிலை­மையை அடைந்­துள்­ளது. குறித்த குடி­யி­ருப்பில் வசித்து வரும் அனை­வ­ரையும் உடன் வெளி­யேற்­றி குடி­யி­ருப்­பா­ளர்­க­ளுக்கு பாது­காப்­பான இட­மொன்றை பெற்­றுக்­கொ­டுக்க வேண்டும்.

அத்­துடன் குறித்த கட்­ட­டத்­தொ­கு­தியில் உள்­ள­வர்­க­ளுக்கு தேவை­யான அனைத்து வீட்டு வச­தி­களை பெற்­றுக்­கொ­டுப்­ப­தற்கும் மாற்று இடங்­களை வழங்­கு­வ­தற்கும் அமைச்­ச­ரவை பத்­தி­ரங்­களை முன்­வைப்­ப­தற்கு தயார் என்றார்.

இதனையடுத்து இடம்பெற்ற பின்னர் கலந்துரையாடலில் வேகந்த குடியிருப்பாளர்களை துரிதமாக வெளியேற்றி பாதுகாப்பான இடங்களை பெற்றுக்கொடுக்குமாறு அதிகாரிகளுக்கு அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.
-எம்.எம்.மின்ஹாஜ், எம்.ஆர்.எம்.வஸீம்- விடிவெள்ளி 
கொழும்பு 2 இல் 700 பேர் வாழும் ஒரு குடியிருப்பின் நிலை. கொழும்பு 2 இல்  700 பேர் வாழும் ஒரு குடியிருப்பின் நிலை. Reviewed by Madawala News on April 26, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.