104 உறுப்பு நாடுகளுக்கும் சர்வதேச T 20 அந்தஸ்து வழங்கியது ஐ.சீ.சீ.


சர்வதேச கிரிக்கெட் சபையில் மொத்தம் 104 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளதோடு இதில் 12 நாடுகள் முழுநேர உறுப்பினர்களாக உள்ளனர்.

இதில் அங்கம் வகிக்கும் 104 உறுப்பு நாடுகளுக்கும் சர்வதேச டி20 அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதாக ஐசிசியின் தலைமை செயல் அதிகாரி டேவிட் ரிச்சர்ட்சன் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவில் இன்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்தத் தகவலை தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, ஆப்ரிக்கா (22), அமெரிக்கா (17), ஆசியா (21), கிழக்கு ஆசிய- பசுபிக் (11), ஐரோப்பா (34) ஆகிய 104 உறுப்பினர்களும் சர்வதேச டி20 அந்தஸ்து பெற்றுள்ளனர்.

இதுவரை 18 நாடுகளுக்கு மட்டுமே சர்வதேச டி20 அந்தஸ்து வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
104 உறுப்பு நாடுகளுக்கும் சர்வதேச T 20 அந்தஸ்து வழங்கியது ஐ.சீ.சீ.  104  உறுப்பு நாடுகளுக்கும் சர்வதேச T 20 அந்தஸ்து  வழங்கியது  ஐ.சீ.சீ. Reviewed by Madawala News on April 26, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.