மீண்டும் ஆரம்பித்தார் விராது தேரர்.


மியான்மாரின் சர்ச்சைக்குரிய பிக்குவான விராது, ஓராண்டு காலத்
தடைக்குப் பின்னர், தனது செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பித்துள்ளார்.

 முஸ்லிம்களுக்கு எதிரான இனவாதக் கருத்துகளை வெளிப்படுத்துவதில் அறியப்பட்ட இவர், தனது கருத்துகளுக்கும், ராக்கைனில் றோகிஞ்சா முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளுக்கும் இடையில் சம்பந்தம் கிடையாது என, தற்போது தெரிவித்துள்ளார்.

அதிகளவு சர்ச்சைகளை ஏற்படுத்திய இவர், போதனைகள் ஈடுபடக்கூடாது என, 2017ஆம் ஆண்டில், மியான்மாரின் உச்சநிலை மத பீடத்தால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தன்னுடைய தடை முடிவடைந்த பின்னர் கருத்துத் தெரிவித்த அவர், ராக்கைனில் காணப்படுவது, “பெங்காலிகளின் பயங்கரவாதம்” என்று குறிப்பிட்டார்.

ராக்கைன் பிரச்சினையே, தானே உருவாக்கினார் எனத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்த அவர், தனது சொந்த நகரான மன்டாலே பகுதி, இன்னமும் அமைதியாக இருப்பதாகக் குறிப்பிட்டார்.

ராக்கைன் வன்முறைகள் காரணமாக, சுமார் 700,000 றோகிஞ்சா முஸ்லிம்கள், அங்கிருந்து வெளியேறி, பங்களாதேஷில் தஞ்சமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மீண்டும் ஆரம்பித்தார் விராது தேரர். மீண்டும் ஆரம்பித்தார் விராது தேரர். Reviewed by Euro Fashions on March 12, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.