(படங்கள்) நான்கு பொலிஸ் அதிகாரிகள் கைது.


-பாருக் சிஹான் -
பெறுமதி வாய்ந்த வலம்புரிச் சங்குகளை விற்பனை செய்வதற்காக தம்வசம் வைத்திருந்தார்கள் என்ற சந்தேகத்தில் நான்கு பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்படுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

உதவிப் பொலிஸ் இன்ஸ்பெக்டர்  உட்பட மூன்று பொலிஸ் கான்ஸ்டபிள்களே  காலி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹிக்கடுவை பிரதேசத்தில் மூவர் பெறுமதியான வலம்புரிச் சங்குகுளை விற்பனைக்காக வைத்திருப்பதாக,  கைது செய்யப்பட்ட உதவி பொலிஸ் இன்ஸ்பெக்டருக்கு கிடைத்த தகவல்  ஒன்றின் அடிப்படையில் அவரும் ஏனைய மூன்று கான்ஸ்டபிள்களும் அங்கு சென்று அந்த மூவரிடமிருந்த வலம்புரிச் சங்குகளைக் கைப்பற்றியுள்ளனர்.

ஆனால், இவர்கள் வலம்புரிச் சங்குகளை கைப்பற்றி போதும் அதனை வைத்திருந்த மூவரையும் விடுவித்துள்ளனர். இதனையடுத்தே இந்த பொலிஸ் அதிகாரிகள் நால்வரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைப்பற்றப்பட்ட வலம்புரிச் சங்குகளின் பெறுமதி ஒரு கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

--
farook sihan
(படங்கள்) நான்கு பொலிஸ் அதிகாரிகள் கைது. (படங்கள்) நான்கு பொலிஸ் அதிகாரிகள் கைது. Reviewed by Madawala News on March 04, 2018 Rating: 5