(படங்கள்) யாழை நோக்கி சென்ற மிக பழமை வாய்ந்த வாகனங்களின் பேரணி.


-பாறுக் ஷிஹான்-

கொழும்பு விண்டேஜ் கார் உரிமையாளர்கள் சங்கத்தின் 30 ஆவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக மிக பழமை வாய்ந்த வாகனங்களின் பேரணி ஒன்று கொழும்பில் இருந்து யாழ் நோக்கி வருகைதந்துள்ளது.

கடந்த வியாழக்கிழமை  முதலாம் திகதி  கொழும்பில் இருந்து ஆரம்பித்த பழமைவாய்ந்த பதினெட்டு கார் வகை வாகனங்களும் இரண்டுமோட்டார் சைக்கிளும் பேரணியாக அநுராதபுரம் வந்தடைந்து அங்கிருந்து மீண்டும் வெள்ளிக்கிழமை(2) மாலை யாழ் நகரை வந்தடைந்தன.

அத்துடன்   இன்று(3) சனிக்கிழமை காலை 8.30 மணியளவில் யாழ்ப்பாணம் கோட்டை ஊடாக நல்லூர் வீதி வழியாக மீண்டும் பேரணி அநுராதபுரம் ஊடாக கொழும்பு சென்றடையும் என கழகத்தின் ஒழுங்காமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதே வேளை குறித்த  வாகன பேரணி யாழ் கோட்டையை வந்தடைந்த போது வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் றோசான் பெனாண்டோ பேரணியாக வந்த வாகனங்களினை பார்வையிட்டார். மிகவும் பழமை வாய்ந்த வாகன பேரணியை பெருமளவிலான பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டுள்ளனர்.

(படங்கள்) யாழை நோக்கி சென்ற மிக பழமை வாய்ந்த வாகனங்களின் பேரணி. (படங்கள்) யாழை நோக்கி சென்ற மிக பழமை வாய்ந்த வாகனங்களின் பேரணி. Reviewed by Euro Fashions on March 04, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.