வன்முறை சம்பவங்களால் சேதமடைந்த சொத்துக்கள் தொடர்பில் அருகில் உள்ள காவல்நிலையத்தில் அறிவிக்கவும். காவற்துறை கோரிக்கை.


கடந்த தினங்களில் கண்டியில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களால் சேதமடைந்த சொத்துக்கள் தொடர்பாக
இதுவரை முறைப்பாடு செய்யவில்லையென்றால் அது தொடர்பில் அருகில் உள்ள காவல்நிலையத்தில் அறிவிக்குமாறு காவற்துறை கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை, கண்டியில் மூடப்பட்டிருந்த அனைத்து பாடசாலைகளும் நாளை மீண்டும் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

கண்டியில் ஏற்பட்ட குழப்பநிலைகள் காரணமாக கடந்த 7ஆம் திகதி அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை முடிப்படுவதாக கல்வி அமைச்சினால் அறிவிக்கப்பட்டது.

கண்டியின் சில பகுதிகளில் ஏற்பட்ட குழப்பநிலை தற்போது முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

இருப்பினும் தற்போது காவற்துறையினர் மற்றும் பாதுகாப்பு தரப்பின் அந்த பகுதிகளில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் இதுவரையில் நாடு முழுவதிலும் 230 பேர் வரையில் இதுவரையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவற்றுள் கண்டிக்கு உட்பட்ட பிரதேசங்களில் மாத்திரம் 161 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு குழப்ப நிலைகளை ஏற்படுத்தியவர்களுக்கு எதிராக பாரபட்சமின்ற சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு சட்டம் மன்றும் ஒழுங்கு அமைச்சர் ரங்ஜித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.

மொனராகலை பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இதனை குறிப்பிட்டார்.

வன்முறை சம்பவங்களால் சேதமடைந்த சொத்துக்கள் தொடர்பில் அருகில் உள்ள காவல்நிலையத்தில் அறிவிக்கவும். காவற்துறை கோரிக்கை. வன்முறை சம்பவங்களால் சேதமடைந்த சொத்துக்கள் தொடர்பில் அருகில் உள்ள காவல்நிலையத்தில் அறிவிக்கவும். காவற்துறை கோரிக்கை. Reviewed by Madawala News on March 11, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.