உத்தரவாதம் உதாசீதனப்படுத்தப்பட்டால்...!


-எம்.ஏ.ஹபீழ் ஸலபி-

இன்று எங்கு பாரத்தாலும் முஸ்லிம் உம்மத் கருவறுக்கப்படுகிறது. பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றது.
உலகை ஆண்ட சமூகம், இன்று தம்மைவிட சிறுபான்மை சமூகங்களால் ஆளப்பட்டு, நசுக்கப்படுகிறது. முஸ்லிம் உம்மத்தின் சமகால துன்பத்திற்கும் துயரத்திற்கும் விடிவு இல்லையா என்று அனைவரும் ஏங்குகின்றனர். இத்தகையை நிலைக்கு  இறை உத்தரவாத உதாசீனம்தான் காரணம் என்பதை பின்வரும் நபிமொழி தெளிவாக உணர்த்துகிறது.

இதைச் செய்யாவிட்டால் ,எதிரிகளால் முஸ்லிம் உம்மாவை எதுவும் செய்ய முடியாது !

5144 - حَدَّثَنَا أَبُو الرَّبِيعِ الْعَتَكِيُّ وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ كِلَاهُمَا عَنْ حَمَّادِ بْنِ زَيْدٍ وَاللَّفْظُ لِقُتَيْبَةَ حَدَّثَنَا حَمَّادٌ عَنْ أَيَّوبَ عَنْ أَبِي قِلَابَةَ عَنْ أَبِي أَسْمَاءَ عَنْ ثَوْبَانَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ زَوَى لِي الْأَرْضَ فَرَأَيْتُ مَشَارِقَهَا وَمَغَارِبَهَا وَإِنَّ أُمَّتِي سَيَبْلُغُ مُلْكُهَا مَا زُوِيَ لِي مِنْهَا وَأُعْطِيتُ الْكَنْزَيْنِ الْأَحْمَرَ وَالْأَبْيَضَ وَإِنِّي سَأَلْتُ رَبِّي لِأُمَّتِي أَنْ لَا يُهْلِكَهَا بِسَنَةٍ عَامَّةٍ وَأَنْ لَا يُسَلِّطَ عَلَيْهِمْ عَدُوًّا مِنْ سِوَى أَنْفُسِهِمْ فَيَسْتَبِيحَ بَيْضَتَهُمْ وَإِنَّ رَبِّي قَالَ يَا مُحَمَّدُ إِنِّي إِذَا قَضَيْتُ قَضَاءً فَإِنَّهُ لَا يُرَدُّ وَإِنِّي أَعْطَيْتُكَ لِأُمَّتِكَ أَنْ لَا أُهْلِكَهُمْ بِسَنَةٍ عَامَّةٍ وَأَنْ لَا أُسَلِّطَ عَلَيْهِمْ عَدُوًّا مِنْ سِوَى أَنْفُسِهِمْ يَسْتَبِيحُ بَيْضَتَهُمْ وَلَوْ اجْتَمَعَ عَلَيْهِمْ مَنْ بِأَقْطَارِهَا أَوْ قَالَ مَنْ بَيْنَ أَقْطَارِهَا حَتَّى يَكُونَ بَعْضُهُمْ يُهْلِكُ بَعْضًا وَيَسْبِي بَعْضُهُمْ بَعْضًا   صحيح مسلم

அல்லாஹ் எனக்கு பூமியைச் சுருட்டிக் காண்பித்தான்.   அதில் சூரியன் உதிக்குமிடங்களையும் அது மறையுமிடங்களையும் கண்டேன்.

என்னிடம் சுருட்டிக் காட்டப்பட்ட அந்தப் பகுதிகளை எனது சமுதாயத்தின் ஆட்சி சென்றடையும். நான் தங்கம், வெள்ளிச் சுரங்கங்கள் வழங்கப்பட்டிருந்தேன்.

இதைக் கண்ட பின் "எனது சமுதாயத்தைப் பெரும் பஞ்சத்தின் மூலம் அழித்து விடாதே!  என் சமுதாய மக்களின் ஆட்சி அதிகாரத்தை அழித்தொழிக்கும் எந்த ஒரு பிற சமுதாய எதிரியையும் அவர்கள் மீது சாட்டி விடாதே!'' என்று என் சமுதாயத்திற்காக என் ரப்பிடம் துஆச் செய்தேன். முஹம்மதே!  நான் ஒரு விவகாரத்தில் முடிவு செய்து விட்டால், அது நிச்சயமாக மாற்றப்படாது.


நான் உமது சமுதாயத்திற்காக (நீர் கேட்டவற்றை) உமக்கு வழங்குகின்றேன்.  நான் உமது சமுதாய மக்களை பெரும் பஞ்சத்தின் மூலம் அழிக்க மாட்டேன்  உமது சமுதாய மக்களின் ஆட்சியதிகாரத்தை அழித்தொழிக்கும் எந்த ஒரு பிற சமுதாயத்து எதிரியையும் அவர்கள் மீது சாட்ட மாட்டேன். 


  எதிரிகள் இப்பூமியின் எந்தப் பாகங்களில் அணி திரண்ட போதிலும் சரியே!  உமது சமுதாய மக்களில் ஒருவர் இன்னொருவரை அழித்து, ஒருவர் இன்னொருவரை சிறைப் பிடிக்கும் நிலைக்குச் செல்லாத வரை! ( இந்த உத்தரவாதம் நீடிக்கும்)'' என்று என்னுடைய இறைவன் கூறினான். நூல் : முஸ்லிம் 5144

முஸ்லிம் உம்மாவை வளைத்து நிற்கும் வஹ்ன் எனும்
உலக மோகமும் உயிர் மோகமும்
 (22397) 22760- حَدَّثَنَا أَبُو النَّضْرِ ، حَدَّثَنَا الْمُبَارَكُ ، حَدَّثَنَا مَرْزُوقٌ أَبُو عَبْدِ اللهِ الْحِمْصِيُّ ، أَخْبَرَنَا أَبُو أَسْمَاءَ الرَّحَبِيُّ ، عَنْ ثَوْبَانَ مَوْلَى رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : يُوشِكُ أَنْ تَدَاعَى عَلَيْكُمُ الأُمَمُ مِنْ كُلِّ أُفُقٍ كَمَا تَدَاعَى الأَكَلَةُ عَلَى قَصْعَتِهَا ، قَالَ : قُلْنَا : يَا رَسُولَ اللهِ ، أَمِنْ قِلَّةٍ بِنَا يَوْمَئِذٍ ؟ قَالَ : أَنْتُمْ يَوْمَئِذٍ كَثِيرٌ ، وَلَكِنْ تَكُونُونَ غُثَاءً كَغُثَاءِ السَّيْلِ ، تُنْتَزَعُ الْمَهَابَةُ مِنْ قُلُوبِ عَدُوِّكُمْ ، وَيَجْعَلُ فِي قُلُوبِكُمُ الْوَهْنَ . قَالَ : قُلْنَا : وَمَا الْوَهْنُ ؟ قَالَ : حُبُّ الْحَيَاةِ وَكَرَاهِيَةُ الْمَوْتِ. مسند أحمد

உணவு உண்பவர்கள் தங்களது தட்டின் பக்கம் அழைப்பது போல், ஒவ்வொரு திக்கிலிருந்தும் பிற சமுதாயங்கள், உங்களில் ஒருவர் இன்னொருவரைக் கொன்றிட அழைத்திடும் கட்டம் வரும்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  "அன்றைய தினம் நாங்கள் சிறுபான்மையாக இருப்போம் என்பதாலா?'' என்று ஒருவர் கேட்டார்.
 அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அந்நாளில் நீங்கள் பெரும்பான்மையாகவே இருப்பீர்கள்.  எனினும், வெள்ளத்தில் மிதந்து செல்லும் நுரையைப் போன்று ஆகி விடுவீர்கள்.  உங்கள் விரோதியின் உள்ளங்களிலிருந்து (உங்களைப் பற்றிய) அச்சம் கழன்று விடும்!  உங்களுடைய உள்ளங்களில் அல்லாஹ் "வஹ்னை' ஏற்படுத்தி விடுவான்'' என்று பதிலளித்தார்கள்.


 "அல்லாஹ்வின் தூதரே! வஹ்ன் என்றால் என்ன?'' என்று நாங்கள் கேட்டோம்  "உலகத்தை நேசிப்பது, மரணத்தை வெறுப்பது'' என்று பதிலளித்தார்கள்.  நூல் : அஹ்மத் 22760
உத்தரவாதம் உதாசீதனப்படுத்தப்பட்டால்...! உத்தரவாதம் உதாசீதனப்படுத்தப்பட்டால்...! Reviewed by Euro Fashions on March 03, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.