பேஸ்புக், வாட்சப், வைபர் தடைநீக்கம் எப்பொழுது?


தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ள பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களை
இன்று முதல் பயன்படுத்துவதற்கான வாய்ப்பு கிடைக்கலாம் என இராஜாங்க அமைச்சர் ஹர்சடி சில்வா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் சேஹான் சேமசிங்க நேற்று நாடாளுமன்றத்தில் வைத்து எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அண்மையில் கண்டியில் இடம்பெற்ற குழப்பநிலை தொடர்பில் சமூகவலைத்தளங்கள் ஊடாக பரவிய இனவாத பிரசாரங்களை தடுப்பதற்காக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவால் பேஸ்புக், வைபர், இமோ மற்றும் வட்சப் உள்ளிட்ட சமூகவளைத்தளங்கள் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக், வாட்சப், வைபர் தடைநீக்கம் எப்பொழுது? பேஸ்புக், வாட்சப், வைபர் தடைநீக்கம் எப்பொழுது? Reviewed by Madawala News on March 09, 2018 Rating: 5