இரு குழுக்களுக்கு இடையில் துப்பாக்கி சூட்டு சம்பவம்.. ஒருவர் பலி இருவர் படுகாயம்.


கொழும்பு, கொட்டாஞ்சேனையில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்து
இருவர்  படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவத்தில் காயமடைந்த மூவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச் சம்பவம் சற்றுமுன்னர் கொட்டாஞ்சேனை சுமித்ராராம வீதியில் இடம்பெற்றுள்ளது.

காயமடைந்த மூவரில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருந்த நிலையில் சற்றுமுன்னர் உயிரிழந்ததாக  வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட சம்பவம் எனவும், இனவாத செயற்பாட்டு நடவடிக்கை இல்லை எனவும் தெரிவிக்கபடுகிறது.
இரு குழுக்களுக்கு இடையில் துப்பாக்கி சூட்டு சம்பவம்.. ஒருவர் பலி இருவர் படுகாயம். இரு குழுக்களுக்கு இடையில்  துப்பாக்கி சூட்டு சம்பவம்.. ஒருவர் பலி இருவர் படுகாயம். Reviewed by Madawala News on March 08, 2018 Rating: 5