கிரிக்கட் வீரர் ரமித் ரம்புக்வெல்ல கைது.


இலங்கையின் முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் மகன் ரமித் ரம்புக்வெல்ல இன்று காலை
 கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு நாரஹேன்பிட்ட பகுதியில் நேற்றிரவு பல்கலைக்கழக மாணவர்களை அச்சுறுத்திய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரியவருகிறது.

இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு கொழும்பு சுதந்திர சதுக்கப் பகுதியில் மதுபோதையில் வாகனம் செலுத்தி, விபத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவின் மகனான ரமித் ரம்புக்வெல்ல இலங்கைக் கிரிக்கெட் வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.
கிரிக்கட் வீரர் ரமித் ரம்புக்வெல்ல கைது. கிரிக்கட் வீரர் ரமித் ரம்புக்வெல்ல கைது. Reviewed by Madawala News on March 10, 2018 Rating: 5