கண்டி கலவரம்... பாதிக்கப்பட்ட வீடுகள் வர்த்தக நிலையங்களுக்கு நிவாரணம் உதவி இன்று முதல்.


கண்டி மாவட்டத்தில் வன்முறையினால் பாதிக்கப்பட்ட இடங்களிலுள்ள வீடுகள் வர்த்தக நிலையங்களுக்கு
நிவாரணம் உதவி இன்று (12) முதல் திகதி முதல் வழங்கப்படவுள்ளது


இன்றும்  நாளையும்  முதல் கட்ட நஷ்டயீடுகள் வழங்கப்படவுள்ளன. ஏனைய நஷ்டயீட்டுக் கொடுப்பனவுகள் யாவும் கிடைக்கப் பெற்ற சேத விபரங்களின் மதிப்பீட்டின்படி  ஒரு மாதத்திற்குள் வழங்கி வைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அவர்களுடைய ஜீவனோய வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக சுதேச விவகார அமைச்சு தெரிவிக்கின்றது.


கண்டியில் அசாதாரண சூழ்நிலையின் போது பாதிக்கப்பட்ட பள்ளிவாசல்கள், வீடுகள் போன்றவற்றின் சேத விபரங்களின் மதிப்பீடுகள் ஒரு வாரத்தில் முடிவடைலாம் என்று எதிர்பார்ப்பதாக கண்டி மாவட்ட செயலாளர் எம். எச். பி ஹிட்டிசேகர தெரிவித்தார்.
அத்துடன் இந்த நாட்களுக்குள் கண்டி பொலிஸ் பிரிவுக்குள் வன்முறையினால் பாதிக்கப்பட்டுள்ள வீடுகள், வர்த்தக நிலையகள் பற்றி முறைப்பாடுகள் தெரிவிக்காத  நபர்கள் இருப்பார்களாயின் அவை தொடர்பாக முறைப்பாடுகளை அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் உடன் பதிவு செய்யுமாறு வேண்டுகோள் விடுப்பதாக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.


அதேவேளை நாட்டின் எந்தப் பாகத்திலும்   கலவரம் நிகழ்ந்திருக்குமாயின் அது தொடர்பாக தேடிப்பார்த்து துரித நடவடிக்கை எடுக்குமாறு சுதேச விவாகார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இக்பால் அலி


கண்டி கலவரம்... பாதிக்கப்பட்ட வீடுகள் வர்த்தக நிலையங்களுக்கு நிவாரணம் உதவி இன்று முதல். கண்டி கலவரம்... பாதிக்கப்பட்ட வீடுகள் வர்த்தக நிலையங்களுக்கு நிவாரணம் உதவி இன்று முதல். Reviewed by Madawala News on March 12, 2018 Rating: 5