பொது மக்கள் பொலிஸாரோடு இணைந்து செயற்பட்டால் வன்முறைகள் ஏற்படாமல் தவிர்க்க முடியும்.


(பி.எம்.எம்.ஏ.காதர்)

பிரச்சினைகள் ஏற்படுகின்றபோது பொது மக்கள் பொலிஸாரோடு இணைந்து செயற்பட்டால்
வன்முறைகள் ஏற்படாமல் தவிர்;க்க முடியும் என கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜே.கே.எஸ்.ஜய நித்தி தெரிவித்தார்.

கல்முனை பொலிஸ் விரிவிற்குட்பட்ட சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்களுக்கான விஷேட கூட்டம் சனிக்கிழமை(10-03-2018)மாலை பொலிஸ் நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.இங்கு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


போலிஸ் பரிசோதகர் ஏ.எல்.ஏ.வாஹிதின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இந்த விஷேட கூட்டத்தில் பாதுகாப்பு அதிகாரிகள்,சமயத் தலைவர்கள் மற்றும் சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்களும் கலந்த கொண்டனர்.

இங்கு பொறுப்பதிகாரி ஜே.கே.எஸ்.ஜய நித்தி மேலும் உரையாற்றுகையில் தெரிவித்தாவது:-பிரச்சினைகள் ஏற்படுகின்ற போது இஞைர்கள் வன்முறையில் ஈடுபடுகின்றனர் இதனால் பலர் கைது செய்யப்பட்டு சிறை செல்ல வேண்டிய நிலை ஏற்படுகின்றது.

இதன் காரணமாக பிரச்சினைகளில் சம்பந்தப்பட்டவர்கள் அரச தொழில் ஒன்றைப் பெற்றுக் கொள்முடியாத நிலை ஏற்படுகின்றது.

அது மாத்திரமன்றி தொழில் வாய்ப்புக்காக வெளிநாடு செல்லும் போதும் அவர்களுக்கான நற்சான்றிதழ்களைப் பெறமுடியாமல் போய்விடுகின்றது.
எனவே சமயத் தலைவர்களும்,பெற்றோர்களும் தங்கள் பிளளைகள் பிரச்சினைகளில் ஈடுபடால் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் இல்லையேல் நாம் எல்லோரும் பல கஷ்டங்களை எதிர்நோக்க  வேண்டிய நிலை ஏற்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.  
பொது மக்கள் பொலிஸாரோடு இணைந்து செயற்பட்டால் வன்முறைகள் ஏற்படாமல் தவிர்க்க முடியும். பொது மக்கள் பொலிஸாரோடு இணைந்து செயற்பட்டால் வன்முறைகள் ஏற்படாமல் தவிர்க்க முடியும். Reviewed by Madawala News on March 12, 2018 Rating: 5