இயற்கை அனர்த்தம்... மாணிக்கமடு மலையில் முஸ்லிங்களின் பிரதேசத்தில் வைக்கப்பட்ட புத்தர் சிலை விழுந்தது.


மாணிக்கமடு மலையில் முஸ்லிங்களின் பிரதேசத்தில் வைக்கப்பட்ட புத்தர் சிலைக் கல்லானது 12-03-2018,
இன்று தானாகவே கவுண்டு மலையிலிருந்து கீழே விழுந்து தலை வேறு உடல் உருவம் வேறாக கிடப்பதை காணமுடிந்தது.

இது தொடர்பாக அப்பிரதேசவாசிகளிடம் வினாவிய போது அவர்கள் கூறுகையில் இன்று காலையில் பலத்த காற்று விசியதன் காரணமாக மாலையிலிருந்த சிலை கீழே விழுந்து சிதறிவிட்டதாக பிரதேசவாசிகள் கூறினர்.

இச்சிலை வைக்கப்பட்ட நாளிலிருந்து தொடர்ச்சியாக அங்கு பொலிஸார் காவலில் இருந்துவந்த நிலையில் இயற்கையின் சீற்றத்தினால் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறுகின்றனர்.

மேலும் அப்பிரதேசங்களில் அசம்பாவிதங்கள் இடம்பெறலாமென அறிந்து பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளது.

முஹம்மட் ஜெலீல்,
நிந்தவூர்.
இயற்கை அனர்த்தம்... மாணிக்கமடு மலையில் முஸ்லிங்களின் பிரதேசத்தில் வைக்கப்பட்ட புத்தர் சிலை விழுந்தது. இயற்கை அனர்த்தம்... மாணிக்கமடு மலையில் முஸ்லிங்களின் பிரதேசத்தில் வைக்கப்பட்ட புத்தர் சிலை விழுந்தது. Reviewed by Madawala News on March 12, 2018 Rating: 5