மனிதர்களின் உண்மையான பிரச்சினைகளும் உருவாக்கப்படும் பிரச்சினைகளும். mh



கடந்த வாரம் கண்டி பிரதேசத்தில் நடந்த கலவரத்தில் சேதமடைந்த சொத்துக்களில்
பெரும்பாலனாவை அப்பாவி முஸ்லிம்களுடையதாகும்.

அதிகமானவர்கள் அன்றாடம்  கூலி வேலை செய்பவர்கள்.

சேதமடைந்த வியாபாரத்தளங்களில் அதிகமானவை சிறு வியாபாரிகளுடயவை.

சில நேரம் அவர்களுடைய ஒரு நாள் வருமானம் ஆயிரம் ரூபாவுக்கும் குறைவாக இருக்கும். 

சேதமடைந்த சில வீடுகளைப் பார்க்கும் பொழுது எனக்கு இப்படி ஒரு நிலமை 
ஏற்பட்டால், திரும்ப பழைய நிலைக்கு  எப்படி வருவேன் என்று சிந்திக்கின்றேன்.

இங்க பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலனவர்களுக்கு மீண்டும் 
எழுந்துவர சக்தியில்லை.
செல்வதற்கு வேறு இடமும் இல்லை.
பாடசாலையில் தற்காலிகமாக தங்கியிருக்கிறார்கள். 

நாட்டின் பெரும்பாலான மக்களைப்போன்று
இவர்களும் மிகவும் கஷ்டத்துடன் வாழ்க்கையை கடத்துபவர்கள்.

வறுமைக்கு இன மத வேறுபாடுகள் இல்லை.
இந்த மக்களிடம் எந்த அரசியலும் இல்லை.
இவர்களது பிரச்சினைகளுக்கு அரசியல்
வாதிகளிடமிருந்து சரியான தீர்வுகள் கிடைத்ததுமில்லை.

இவர்களில் அதிகமானவர்கள் ஒரு நல்ல வாழ்க்கையை அமைத்துக் 
கொள்வதற்காகத்தான் போராடிக் கொண்டு
இருந்திருக்கிறார்கள்.

இரண்டு மூன்று பேர் செய்த தவறுக்கு எங்களை ஏன் பழிவாங்கினார்கள்
என்றுதான் அந்த முஸ்லிம் மக்கள் எம்மிடம் 
கேட்கிறார்கள்.

தாக்குதலினால் மரணமடைந்த குமாரசிங்க
என்பவரது வீட்டுக்கும் சென்றோம். அவரது
பக்கத்து ஊரும் ஒரு முஸ்லிம் ஊர்தான்.

ஆனால் அந்த ஊரில் எந்த அசம்பாவிதமும்
நடைபெறவில்லையாம்.குமாரசிங்கவின்
ஊர் மக்கள் மிகவும் புத்திசாளித்தனமாக
இந்த சம்பவத்தை கையான்டு இருக்கிறார்கள்.

இந்த பகுதியில் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களினதும்,
பாதிக்கப்படாதவர்களினதும் பொதுவான பிரச்சினைகள் ஒன்றுதான்.
பொருளாதாரப் பிரச்சினை,
இருப்பிடம் சம்பந்தமான பிரச்சினை,
தொழில் பிரச்சினை,பிள்ளைகளின் கல்விப்
பிரச்சினை, எதிர்காலம் குறித்த அச்சம்
இவை அனைத்தும் இந்த மக்கள் முகம்
கொடுக்க வேண்டிய உண்மையான 
பிரச்சினைகள்.அனைவரும் ஒன்றாகப் போராட வேண்டிய பிரச்சினைகள்.

ஆனாலும் இந்த மக்கள் யாருடையதோ தேவைக்காக உருவாக்கப்பட்ட ஒரு பிரச்சினைக்காக இன்று போராடிக் கொண்டு இருக்கிறார்கள்.

இந்த இனவாதப் பிரச்சினை இந்தப் பூமியில்
இருக்கும்வரை மக்களின் உண்மையான பிரச்சினைகளை மறக்கடிக்க வைத்துவிட்டு ஒரு சம்பந்தமில்லாத பிரச்சினைக்காக இந்த அப்பாவி மக்களை போராட வைக்க இந்த கேடுகெட்ட ஆட்சியாளர்களால் மட்டும்தான் முடியும்.

சிங்களத்தில் :   உபுல் குமாரப்பெரும
தமிழில்          :  ஸப்வான் பஷீர்
மனிதர்களின் உண்மையான பிரச்சினைகளும் உருவாக்கப்படும் பிரச்சினைகளும். mh மனிதர்களின் உண்மையான பிரச்சினைகளும் உருவாக்கப்படும் பிரச்சினைகளும். mh Reviewed by Euro Fashions on March 13, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.