(படங்கள்) அதிக சத்தத்துடன் பாடலை ஒலிக்கவிட்டு மெய்மயக்கத்தில் ஒட்டிய சாரதி. முதியவர் பலி.


-பாருக் ஷிஹான் -
வடமராட்சி வல்லைவெளியில் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த முதியவா் மீது முச்சக்கர வண்டி மோதியதில்   முதியவா் ஒருவா் உயிரிழந்துள்ளார்.

நேற்றிரவு(03) 8 மணியளவில் இந்த விபத்து வல்லைவெளியில் இடம்பெற்றது.

 வேலைமுடித்து வல்லை வீதியால் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த முதியவா் மீது வேகமாக வந்த    முச்சக்கர வண்டி மோதியதில்  சைக்கிளில் பயணித்த முதியவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

அத்துடன் விபத்தினை ஏற்படுத்திய முச்சக்கரவண்டி வீதியில் புரண்டு விழுந்துள்ளதுடன்  அதன்  சாரதி தப்பியோடியுள்ளார்.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸாா் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளதுடன்  விபத்தினை ஏற்படுத்திய சாரதியை தேடும் முயற்சியில் பொலிஸாா் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

 குறித்த விபத்தானது முச்சக்கரவண்டியில் உள்ள வானொலியில்  அதிக சத்தத்தில் பாடலை ஒலிக்கவிட்டு மெய்மயக்கத்தில் சாரதி  ஓட்டியதனால் ஏற்பட்டுள்ளதாக நேரில் கண்டவர்கள் குறிப்பிட்டனர்.

குறித்த விபத்தில் 60 வயதுடைய முதியவா் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
(படங்கள்) அதிக சத்தத்துடன் பாடலை ஒலிக்கவிட்டு மெய்மயக்கத்தில் ஒட்டிய சாரதி. முதியவர் பலி. (படங்கள்) அதிக சத்தத்துடன் பாடலை ஒலிக்கவிட்டு மெய்மயக்கத்தில் ஒட்டிய  சாரதி. முதியவர் பலி. Reviewed by Euro Fashions on March 03, 2018 Rating: 5