கண்டி மாவட்டத்தில் நாளை படசாலை விடுமுறை. Kn


கண்டி நிர்வாக மாவட்டத்தில் உள்ள சகல அரச பாடசாலைகளும் நாளை (06) மூடப்படும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். 


கண்டி, திகன நகரில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக கண்டி நிர்வாக மாவட்ட பகுதியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ளது. 


இந்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நாளை (06) காலை ஆறு மணிவரையில் அமுலில் இருப்பதால் கண்டி நிர்வாக மாவட்டத்தில் உள்ள சகல அரச பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கண்டி மாவட்டத்தில் நாளை படசாலை விடுமுறை. Kn கண்டி மாவட்டத்தில் நாளை படசாலை விடுமுறை. Kn Reviewed by Euro Fashions on March 05, 2018 Rating: 5