(படங்கள்) வாய்க்கால் வீதியால் வந்துகொண்டிருந்த குடும்பஸ்தரை வெட்டிக்கொன்ற இனந்தெரியாதோர்.


-பாருக் ஷிஹான் -
மட்டக்களப்பு,வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 39ஆம் கிராமத்தில் நேற்று வெள்ளிக்கிழமை
இனந்தெரியாதவர்களினால் குடும்பஸ்த்தர் ஒருவர் வெட்டிக்கொலைசெய்யப்பட்டுள்ளார்.

நேற்று இரவு 39ஆம் கிராமமத்தில் வாய்க்கால் வீதியால் வந்துகொண்டிருந்தவரை இடைமறித்தவர்கள்  கத்தியால் கடுமையாக முறையில் வெட்டியுள்ளனர்.

இருவர் மதுவருந்திவிட்டு வந்துகொண்டிருந்தபோதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் இதன்போது கூடவந்ததாக கருதப்படும் இளைஞரும் காயங்களுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது படுகாயமடைந்த 39ஆம் கிராமத்தினை சேர்ந்த 49வயதான எம்.கமலேஸ்வரன் என்பவர் மகிழடித்தீவு வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டபோதிலும் இடையிலேயே அவர் உயிரிழந்ததாக வெல்லாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

அதனைத்தொடர்ந்து சடலம் அங்கிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கு பிரேத அரையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் உயிரிழந்த நபருடன் வந்ததாக சொல்லப்படும் இளைஞர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் மேலும் ஒருவரை கைதுசெய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு சென்ற மட்டக்களப்பு மாவட்ட குற்றதடவியல் பிரிவு பொறுப்பதிகாரி கே.ரவிச்சந்திரன் தலைமையில் பொலிஸார் மோப்ப நாயின் உதவியுடன் விசாரணைகள மேற்கொண்டுவருகின்றனர்.

இதேநேரம் குறித்த சம்பவ இடத்திற்கு என்ற களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஐ.ஆர்.றிஸ்வி இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டார்.

(படங்கள்) வாய்க்கால் வீதியால் வந்துகொண்டிருந்த குடும்பஸ்தரை வெட்டிக்கொன்ற இனந்தெரியாதோர். (படங்கள்)  வாய்க்கால் வீதியால் வந்துகொண்டிருந்த குடும்பஸ்தரை வெட்டிக்கொன்ற இனந்தெரியாதோர். Reviewed by Euro Fashions on March 03, 2018 Rating: 5