(படங்கள்) முஸ்லிம்களுடன் சேர்ந்து பௌத்த சகோதரர்களும் இரா முழுவதும் கண் விழித்து பாதுகாப்புப் பணியில்..


நாட்டில் ஒரு சில இனவாதக் குழுக்களினால் ஏற்படுத்தப்பட்டுள்ள தாக்குதல் சம்பவங்களையடுத்து
பல்வேறு பாகங்களிலுமுள்ள பள்ளிவாயல்களும் தாக்கப்பட்டன.

இதனைக் கருத்தில் கொண்டு கெக்கிராவ ஜூம்மா பள்ளிவாயலை கடந்த இரண்டு நாட்களாக முஸ்லிம்களுடன் சேர்ந்து அப்பிரதேசத்திலுள்ள பௌத்த சகோதரர்களும் இரா முழுவதும் கண் விழித்து பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதில் விசேடமான செய்தி யாதெனில் கடந்த இரண்டு நாட்களாக இடம்பெறும் இந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகளானது கெக்கிராவ போதி ரஜ மகா விகாரையின் விகாரதிபதியினால் தலைமை தாங்கப்படுகின்றமையே ஆகும்.

இத்தகைய முன்மாதிரிகள் இனங்களுக்கிடையிலான பரஸ்பரப் புரிந்துணர்வுக்கும் சகவாழ்விற்கும் இன்றியமையாதவைகளாகும்.

படமும் தகவலும்: ரா.ப.அரூஸ்.

(படங்கள்) முஸ்லிம்களுடன் சேர்ந்து பௌத்த சகோதரர்களும் இரா முழுவதும் கண் விழித்து பாதுகாப்புப் பணியில்.. (படங்கள்)  முஸ்லிம்களுடன் சேர்ந்து பௌத்த சகோதரர்களும் இரா முழுவதும் கண் விழித்து பாதுகாப்புப் பணியில்.. Reviewed by Madawala News on March 09, 2018 Rating: 5