கண்டி நிலவரம் தொடர்பில் காத்தான்குடி பள்ளிவாயல்களின் அறிவித்தல்.


தலைவர்ஃசெயலாளர், சகல பள்ளிவயல்களுக்கும்,
அன்புடையீர்,          السلام عليكم ورحمة الله وبركاته

கீழ்க்காணும் அறிவித்தலை தங்களது பள்ளிவாயல் ஒலிபெருக்கியில் பொதுமக்களுக்கு அறிவிக்குமாறு தயவாய்க் கேட்டுக்கொள்கின்றோம்.

அன்புப் பொதுமக்களுக்கு, காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனம் மற்றும் காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா விடுக்கும் முக்கியமான அறிவித்தல்.

அன்புடையீர்,
السلام عليكم ورحمة الله وبركاته
தற்போது நமது நாட்டில் முஸ்லிம்களுக்கு  எதிராக கட்டவிழ்த்துவிட்பபட்டிருக்கின்ற இனவாத தாக்குதல்கள் மற்றும் வண்முறைகள் பல பிரதேசங்களுக்கும் பரவியிருக்கின்றன.

கடந்த சில நாட்களாக அம்பாறை மற்றும் திகண பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட முஸ்லிம்களுக்கெதிரான தாக்குதல் சம்பவங்களில் பல இறையில்லங்கள்  உடைக்கப்பட்டு தீ வைக்கப்பட்டுள்ளதோடு, முஸ்லிம்களின் பல கோடிக்கணக்கான சொத்துக்களும் நாசமாக்கப்பட்டுள்ளன.


முஸ்லீம்கள் அனைவரும் சகோதரர்கள் எப்பிரதேசங்களிலும் அவன் அநியாயமான முறையில் பாதிக்கப்படுகின்ற போது  அதற்காக குரல் கொடுப்பதற்கும் அல்லாஹ்விடத்தில் பிரார்த்தனை செய்வதற்கும் நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.


மேற்படி விடயங்களைக் கருத்திற்கொண்டுள்ள சம்மேளனம் மற்றும் ஜம்இய்யதுல் உலமா இது தொடர்பில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எதிராக உரிய சட்ட  நடவடிக்கைகளை விரைவாக எடுக்கும்படி பொலிஸ்மா அதிபர்  மற்றும் அரசாங்கத்துக்கும் கடும் அழுத்தங்களைக் கொடுத்துள்ளது.
நமது முஸ்லிம் சகோதரர்களுக்கு ஏற்பட்டுள்ள கஷ்டங்கள் நீங்குவதற்கும், சமாதானமானதும், சமூகமானதுமான நிலைமை தோன்றுவதற்கும் கீழ்வரும் விடயங்களைக் கடைப்பிடிக்குமாறு நாம் பொதுமக்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.


01. ஐங்கால தொழுகைகளில் குனூத் அந்நாஸிலாவை  நிலைமை சீராகும் வரை ஓதுமாறும்,

02. முடியுமானவர்கள் நோன்பு நோற்று அல்லாஹ்விடம் அதிகமதிகம் இஸ்திஃபார் பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறும்,

03. தற்போது வண்முறைகள் இடம்பெறுகின்ற பிரதேசங்களுக்கு அல்லது அப்பிரதேசங்களினூடாக பிரயாணங்கள் மேற்கொள்வதைத் தவிர்ந்து கொள்ளுமாறும்,

04. தேவையற்ற வீன் வதந்திகளைப் பரப்புவதை விட்டும் தவிர்ந்துகொள்ளுமாறும் கேட்டுக்கெர்கின்றோம்.

'நம்பிக்கை கொண்டோரே! பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள்! நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கின்றான்' (2:153)
جزاك الله خيرا
2018.03.05

கண்டி நிலவரம் தொடர்பில் காத்தான்குடி பள்ளிவாயல்களின் அறிவித்தல். கண்டி நிலவரம் தொடர்பில் காத்தான்குடி பள்ளிவாயல்களின் அறிவித்தல். Reviewed by Madawala News on March 05, 2018 Rating: 5