பெற்றோல் கைக்குண்டு தானகாவே வெடித்து உயிரிழந்த நபரின் உடல் தகனம் செய்யப்பட்டது. சலசலப்புகள் எதுவும் இல்லை.


அம்பத்தென்ன முல்லேகம பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற இனவன்முறையில் தாக்குதலுக்காக
கொண்டு வந்த பெற்றோல் கைக்குண்டு தானகாவே வெடித்து உரிழந்த நபரின் உடல் இன்று மாலை 3 மணியளவில்  தகனம் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

 உயிரிழந்த நபர் பூஜாப்பிட்டிய கலுவான பிரதேசத்தைச் சேர்ந்த குனரத்ன பண்டார என்பதுடன் இவரின் இறுதிக் கிரியையின் போது, அசாதாரண சூழ்நிலை ஏற்படாத வகையில் பாதுகாப்பைக் கருத்திற் கொண்டு பல முன்னேற்பாடுகள் மேற்கொள்ளபட்டன.

இறுதிக் கிரியைக்கு அவ்வூருக்கு வரும் மக்களின் அடையாள அட்டைகள் பரிசோதிக்கபட்டது மற்றும் கடற்படையினர், விசேட இராணுவத்தினர் ஆகியோர் கடமையில் இருந்தது, மற்றும் அவரின் இறுதிக் கிரியை ஊர்வலமாக வேளியுருக்கு  எடுத்துச்செல்லப் படாமல் குறித்த ஊரிலேயே நடந்தது போன்ற ஏற்பாடுகள் பாதுகாப்பு தரப்பால் மேற்கொள்ளபட்டது.

முல்லேகம பிரதேசத்தில் முஸ்லிம்களுடைய வர்த்தக நிலையம் மற்றும் பள்ளிவாசலை இலக்கு வைத்து தாக்குதலுக்காக கொண்டு வந்த பெற்றோல் கைக்குண்டு தானாக வெடித்தமையினாலேயே இவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது .
பெற்றோல் கைக்குண்டு தானகாவே வெடித்து உயிரிழந்த நபரின் உடல் தகனம் செய்யப்பட்டது. சலசலப்புகள் எதுவும் இல்லை.  பெற்றோல் கைக்குண்டு தானகாவே வெடித்து உயிரிழந்த நபரின் உடல் தகனம் செய்யப்பட்டது. சலசலப்புகள் எதுவும் இல்லை. Reviewed by Madawala News on March 09, 2018 Rating: 5