மண்னெண்ணையை ஊற்றி, தீ மூட்டிக் கொள்ளப்போவதாக கணவரை எச்சரித்த பெண் தீப்பிடித்து பலி.


புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் கணவரை அச்சுறுத்தும் நோக்கில் உடலின் மண்னெண்ணையை
ஊற்றி தீவைக்க முற்பட்ட பெண்ணொருவர் உயிரிழந்தார்.

தமது கணவருடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்து குறித்த பெண், தாம் தீ மூட்டிக் கொள்ளப்போவதாக கணவரிடம் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் உடலில் ஊற்றிய மண்னெண்ணையில் தவறுதலாக தீபற்றிக்கொண்ட நிலையில் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

தீயை அணைக்கச் சென்ற நிலையில் கணவருக்கும் தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

பின்னர் இருவரும் புதுக்குடியிருப்பு மருந்துமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனிற்றி மனைவி பலியானதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.
மண்னெண்ணையை ஊற்றி, தீ மூட்டிக் கொள்ளப்போவதாக கணவரை எச்சரித்த பெண் தீப்பிடித்து பலி. மண்னெண்ணையை ஊற்றி, தீ மூட்டிக் கொள்ளப்போவதாக கணவரை எச்சரித்த பெண் தீப்பிடித்து பலி. Reviewed by Madawala News on March 11, 2018 Rating: 5