இலங்கை பேஸ்புக் பாவனையாளர்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் விபரம்.


இலங்கை பேஸ்புக் வலைத்தளம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டமை தொடர்பில் பேஸ்புக்
நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

பேஸ்புக் நிறுவனம் மற்றும் இலங்கை அரசாங்க தரப்பிற்கு இடையில் நீண்ட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ள நிலையில் இணக்கப்பாட்டிற்கு வந்துள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

மக்களை கோபப்படுத்தும் தகவல் பரிமாறுதல் மற்றும் பதிவிடலை தடுப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

அந்த விடயங்களை வெற்றிகரமாக்கிக் கொள்வதற்காக இலங்கை அரசாங்கம் மற்றும் அரச சார்பற்ற அமைப்புகளின் உதவி அவசியம் என பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் காலங்களில் இலங்கை அரசாங்கம் மற்றும் அரச சார்பற்ற அமைப்புகளின் உதவியுடன் மக்களை கோபப்படுத்தும் தகவல்கள் பரிமாறுபவர்களுக்கு சட்டத்தை செயற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையர்களினால் திறக்கப்படும் பேஸ்புக் கணக்குகள் தொடர்பில் அதிக அவதானம் செலுத்தப்படுகின்ற நிலையில் அவர்களினால் மேற்கொள்ளப்படுகின்ற அனைத்து தகவல் பரிமாற்றங்களையும் கண்கானிப்பதாகவும், இலங்கையர்களின் கணக்கு தொடர்பில் கடுமையான கொள்கை நடைமுறைப்படுத்துவதற்கு பேஸ்புக் நிறுவனம் தீர்மானம் மேற்கொண்டுள்ளது.

இனவாதத்தை அடிப்படையாக கொண்டு மேற்கொள்ளப்படுகின்ற அனைத்து பிரச்சார நடவடிக்கைகளையும் நீக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்ற நிலையில் அவ்வாறான கணக்குகளை முழுமையாக நீக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பேஸ்புக் கணக்கு ஆரம்பிக்கும் போது வழங்கும் தொலைபேசி இலக்கத்தின் உரிமையாளர் அந்த கணக்கிற்கான அனைத்து பரிமாற்றங்கள் தொடர்பில் பொறுப்பு கூற வேண்டும் என நிறுவனம் கூறியுள்ளது.

ஒரு நபரின் புகைப்படம் கணக்கிற்கு வழங்கப்பட்டிருந்தால் அந்த புகைப்படத்திற்கு உரிமையுடையவர் தவறு செய்திருந்தால், அது தொடர்பில் பேஸ்புக் நிறுவனத்திற்கு சந்தேகம் ஏற்பட்டிருந்தால் குறித்த கணக்கிற்கு தகவல் ஒன்று அனுப்பப்படும். 3 நாட்களுக்குள் குறித்த கணக்கின் உரிமையாளர் பதிலளிக்கவில்லை என்றால் அந்த கணக்கு பகிரங்கப்படுத்தப்படும்.

அதனை தொடர்ந்து 7 நாட்களுக்குள் கணக்கு பேஸ்புக் வலைத்தளத்தில் இருந்து நிரந்தரமாக நீக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பேஸ்புக் பாவனையாளர்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் விபரம். இலங்கை பேஸ்புக் பாவனையாளர்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் விபரம். Reviewed by Madawala News on March 14, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.