(வீடியோ) இலங்கையில் முல்லீம்களுக்கு எதிராக நடக்கும் இனவாதத்தை கண்டித்து சவூதி அரேபிய நாட்டில் கண்டனம்.

படமும் தகவலும்(சவூதி அரேபியாவிலிருந்து கிண்ணியா மு.கா.ஹிதாயத்துள்ளாகான்)
இலங்கையில் முல்லீம்களுக்கு எதிராக நடக்கும் இனவாதத்தை கண்டித்து சவூதி அரேபிய நாட்டில் கண்டனம்


இலங்கையில் நடைபெறும் முஸ்லீம்களுக்கு எதிரான இனவாத தாக்குதல்களை கண்டித்து இன்று(09) இலங்கை நாட்டின் நேரப்படி பிற்பகல் 2.00 மணியளவில் இலங்கை வாழ் அனைத்து உறவுகளான முஸ்லீம்,சிங்களம்,தமிழ் ஆகியோர்கள் ஒன்று சேர்ந்து சவூதி அரேபியா நாட்டின் இலங்கை தூதரகமான றியாத் ஒலயாவில் ஒன்று கூடியிருந்தனர்.இதன் போது கண்டி திகன தாக்குதல் உட்பட இலங்கையின் ஏனைய பகுதிகளிலும் இடம் பெற்ற முஸ்லீம்களின் மதஸ்தலமான பள்ளிவாயல்கள் தாக்குதல் பொருளாதார சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பு போன்றவற்றை இதன்போது வண்மையாக கண்டித்து இத்தாக்குதல்களை உடனடியாக இலங்கை அரசாங்கம் நிறுத்தும் படியான மஹஜர் ஒன்றினையும் சவூதி நாட்டின் இலங்கைக்கான தூதுவர் அஸ்மி தாஸிம் அவர்களிடம் ஒப்படைத்தனர்.


இலங்கை செய்திகளுக்காக (ஹஸ்பர் ஏ ஹலீம்)


(வீடியோ) இலங்கையில் முல்லீம்களுக்கு எதிராக நடக்கும் இனவாதத்தை கண்டித்து சவூதி அரேபிய நாட்டில் கண்டனம். (வீடியோ) இலங்கையில் முல்லீம்களுக்கு எதிராக நடக்கும் இனவாதத்தை கண்டித்து சவூதி அரேபிய நாட்டில் கண்டனம். Reviewed by Euro Fashions on March 09, 2018 Rating: 5