லொறி சாரதியின் செயலால் பதட்டமடைந்த மாணவிகள் கல்லால் அடித்து விரட்டி போலீசில் முறையிட்ட்டனர்.


தெஹி­யத்­த­கண்டி பிர­தே­சத்­தி­ல் பாடசாலை முடிந்து வீடு திரும்பும் இரு மாணவிகளுக்கு கையடக்க தொலைபேசி மூலம் ஆபாச படங்களை காட்டிய  நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த இரு மாணவிகள் பாடசாலை முடிந்து வீட்டிற்க்கு சென்று கொண்டிருக்கும் வேலையில் 21 வயதான சிறிய ரக வாகனம் ஓட்டும் சாரதியே மாணவிகளுக்கு இவ்வாறு ஆபாச படங்களை காட்டியதாகவும் இதனால் பதட்டமடைந்த மாணவிகள் கல்லால் அந்த சாரதியை தாக்கியதாகவும் பின்னர் வீட்­டுக்கு வந்த மாண­விகள் பெற்­றோ­ரிடம் நடந்­த­வற்றைக் கூறி தாம் குறித்து வைத்­தி­ருந்த லொறியின் இலக்­கத்தை கொடுத்­துள்­ளனர்.

இந்த முறைப்பாட்டை அடிப்படையாக வைத்து சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்ட 21 வயதான சாரதி மஹி­யங்­கன நீதிவான் நீதி­மன்றில் ஆஜர்­ப­டுத்­திய போது நீதவான் எதிர் வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
லொறி சாரதியின் செயலால் பதட்டமடைந்த மாணவிகள் கல்லால் அடித்து விரட்டி போலீசில் முறையிட்ட்டனர். லொறி சாரதியின் செயலால் பதட்டமடைந்த மாணவிகள்  கல்லால் அடித்து விரட்டி போலீசில் முறையிட்ட்டனர். Reviewed by Madawala News on March 14, 2018 Rating: 5