சம்பிக்க , ஞானசார போன்றவர்கள் விதைத்த இனவாதமே இந்த நாட்டில் தலை விரித்தாடுகிறது...சம்பிக்க , ஞானசார போன்றவர்கள் விதைத்த இனவாதமே இந்த நாட்டில் தலை
விரித்தாடுகிறது என வடரக விஜித தேரர் குறிப்பிட்டார்.

திகன தெல்தெனிய ஆகிய இடங்களில் தொடங்கிய இனவாதம் இன்று நாடு பூராவும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.சம்பிக மற்றும் பொதுபல சேனா ஞானசார தேரர் போன்றவர்களால் பரப்பப்பட்ட இனவாதமே இன்று நாட்டில் தலைவிரித்து ஆடுகிறது.

இன்று 16 , 17 வயது இளம் மாணவர்கள் வெறுப்பு பேச்சுகளை பேசி சமூகவலைகளில் பரப்பிய குற்றச்சாட்டுக்கு கைது செய்யப்பட்டுள்ளார்கள். இவர்களின் இந்த பேச்சுக்கு காரணம் அரசியல் வாதிகள் அல்ல இனவாதிகளே அதிலும் குறிப்பாக கடந்த காலங்களில் இனவாதத்தை பேசி சிறுபிள்ளைகள் மத்தியில் இனவாதம் பரப்பிய பொறுப்பை ஞானசார மற்றும் சம்பிக அவர்களே ஏற்கவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சம்பிக்க , ஞானசார போன்றவர்கள் விதைத்த இனவாதமே இந்த நாட்டில் தலை விரித்தாடுகிறது... சம்பிக்க , ஞானசார போன்றவர்கள் விதைத்த இனவாதமே இந்த நாட்டில் தலை விரித்தாடுகிறது... Reviewed by Madawala News on March 09, 2018 Rating: 5