வாட்சப் அப்டேட்டில் புதிய வசதிகள்.


வாட்ஸ்அப் செயலியில் வழங்கப்பட்ட டெலீட் அம்சத்திற்கு புதிய அப்டேட் வழங்கப்பட்டு இருக்கிறது.
இதில் அனுப்பிய மெசேஜ்களை அழிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டு இருக்கிறது.


வாட்ஸ்அப் செயலியில் அதிக எதிர்பார்ப்புடன் வழங்கப்பட்ட டெலீட் அம்சம் புதிய அப்டேட் வழங்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.18.69 வெர்ஷனில் வாடிக்கையாளர்கள் அனுப்பிய குறுந்தகவல்களை 4,096 நொடிக்குள் (68 நிமிடங்கள் மற்றும் 16 நொடிகள்) அழிக்கும் வசதி கொண்டுள்ளது.

தற்சமயம்  இந்த அம்சம் குறுந்தகவல் அனுப்பிய ஏழு நிமிடங்களுக்குள் அழிக்க வழி செய்கிறது. வாட்ஸ்அப் பீட்டாவில் சோதனை செய்யப்படும் புதிய அம்சத்திற்கான அப்டேட் விரைவில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதே அம்சம் ஐபோன்களிலும் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.

வாட்ஸ்அப் பீட்டா சார்ந்த தகவல்களை வழங்கி வரும் WABetaInfo மூலம் புதிய அப்டேட் சார்ந்த விவரங்கள் வெளியாகி இருக்கிறது. வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா அப்டேட்டில் ஸ்டிக்கர் அம்சம் தானாக டிசேபிள் செய்யப்பட்டுள்ளது, மேலும் ஐகான்களிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது.


புதிய அப்டேட் குறித்த தகவல்கள் வெளியானதில் இருந்து இரண்டு புதிய அப்டேட்கள் வாட்ஸ்அப் பீட்டாவில் வெளியாகி இருக்கிறது. வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.18.70 மற்றும் 2.18.71 என இரண்டு அப்டேட்களில் புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

அந்த வகையில் வாட்ஸ்அப் மூலம் அனுப்பப்பட்ட குறுந்தகவல்கள் மற்றவர்களுக்கு அனுப்பப்பட்டதா என்பதை காட்டும் அம்சம் வழங்கப்பட்டு பின் நீக்கப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது.

குறுந்தகவல் மற்றவர்களுக்கு அனுப்பப்பட்டால், குறிப்பிட்ட குறுந்தகவலில் ஃபார்வேர்டு செய்யப்பட்டதை குறிக்கும் தகவல் இடம் பெற்றிருக்கும். ஃபார்வேர்டு செய்யப்பட்டதை குறிக்கும் இந்த அம்சம் ஸ்பேம் மற்றும் போலி செய்திகளை கட்டுப்படுத்துவதில் முதல் முயற்சியாக பார்க்கப்படுகிறது. இதே அப்டேட்டில் ஸ்டிக்கர்களும் வழங்கப்பட்டு இருக்கிறது.

வாட்சப் அப்டேட்டில் புதிய வசதிகள். வாட்சப் அப்டேட்டில்  புதிய வசதிகள். Reviewed by Madawala News on March 04, 2018 Rating: 5