நாட்டு மக்களின் உயிர்களையும் உடமைகளையும் பாதுகாக்க அரசாங்கம் பொறுப்புடன் பாடுபடுகின்றது - பிரதமர்மக்களின் உயிரையும், சொத்துக்களையும் பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பும் கடமையுமாகும்
என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் இதற்கென அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார். நாட்டின் சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாத்து சகவாழ்வுடன் வாழுமாறு பிரதமர் மக்களைக் கேட்டுள்ளார்.

ஒரே நாடு ஒரே தேசத்தவர்கள் என்ற ரீதியில் செயற்படுவதன் மூலம் துரதிஷ்டவசமான சம்பவங்கள் இடம்பெறுவதைத் தடுக்க முடியும். முப்பது வருடங்களாக பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமாதானமும் சகவாழ்வும் அவசியம் என பிரதமர் தெரிவித்துள்ளார்.

தமது விதந்துரைகளின் அடிப்படையில் ஜனாதிபதி, ரஞ்சித் மத்தும பண்டாரவை சட்டம் ஒழுங்கு அமைச்சராக நியமித்ததாக பிரதமர் கூறியுள்ளார். 

அவர் முழு நேர அடிப்படையில் நாட்டின் சட்டத்தையும் ஒழுங்கையும் பாதுகாக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.

கண்டியில் நிகழ்ந்த அசம்பாவிதங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விரைவில் இழப்பீடு வழங்கப்படும் எனவும் பிரதமர் உறுதியளித்தார்.
நாட்டு மக்களின் உயிர்களையும் உடமைகளையும் பாதுகாக்க அரசாங்கம் பொறுப்புடன் பாடுபடுகின்றது - பிரதமர் நாட்டு மக்களின் உயிர்களையும் உடமைகளையும் பாதுகாக்க அரசாங்கம் பொறுப்புடன் பாடுபடுகின்றது - பிரதமர் Reviewed by Madawala News on March 09, 2018 Rating: 5