கண்டி திகன பிரதேசத்தில் உள்ள பள்ளிவாயல்கள் மற்றும் முஸ்லிம் வியாபார ஸ்தலங்களை மூடிவிடுமாறு உத்தரவு ..பாதுகாப்பு  நிலைமைகளை கருத்தில் கொண்டு இன்றும் நாளையும் கண்டி திகன தெல்தெனிய
பிரதேசத்தில் உள்ள சகல முஸ்லிம் வியாபார நிறுவனங்கள் மற்றும் பள்ளிவாயல்களை மூடிவிடுமாறு கண்டி மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் தன்னிடம் வேண்டியதாக  கண்டி பஸ்லுர் ரஹ்மான் மவ்லவி சற்றுமுன் மடவளை நியுசுக்கு குறிப்பிட்டார்.

முஸ்லிம் வாலிபர்களின் தாக்குதலுக்கு உள்ளான பெரும்பான்மை வாலிபரின் பூதவுடல் நாளை தகனம் செய்யப்படவுள்ள நிலையில் இந்த அறிவித்தலை அவர் விடுத்துள்ளார்.

தெல்தெனிய பகுதிக்கு பிரதி பொலிஸ் மா அதிபர் குழு சென்றுள்ள நிலையில் அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் . எஸ் டி எப் குழுக்கள் அங்கு விரைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கண்டி திகன பிரதேசத்தில் உள்ள பள்ளிவாயல்கள் மற்றும் முஸ்லிம் வியாபார ஸ்தலங்களை மூடிவிடுமாறு உத்தரவு ..  கண்டி திகன பிரதேசத்தில் உள்ள பள்ளிவாயல்கள் மற்றும் முஸ்லிம் வியாபார ஸ்தலங்களை மூடிவிடுமாறு உத்தரவு .. Reviewed by Madawala News on March 04, 2018 Rating: 5