கண்டி நிலவரம் நள்ளிரவு 1.30 am அப்டேட்...கண்டி, தென்னகும்புர பகுதியில் தற்போது பள்ளிவாசல் ஒன்று தாக்கப்பட்டதாக
வெளியான தகவலையடுத்து, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் சற்றுமுன் அங்கு நேரில் சென்று பார்வையிட்டார். 

குறித்த பள்ளிவாசலுக்கு பெற்றோல் போத்தல் ஒன்று வீசப்பட்டுள்ளது. இதனால் பள்ளிவாசலுக்கு எந்தவொரு சேதமும் ஏற்படவில்லை.

இதேவேளை, அலதெனியவில் உள்ள பள்ளிவாசல் ஒன்றுக்கும் பெற்றோல் குண்டு வீசப்பட்டுள்ளது. அந்த பள்ளிவாலின் ஜன்னல்கள் உடைக்கப்பட்டுள்ளன. இவ்விரண்டு பள்ளிவாசல்கள் முன்னாலும் தற்போது இராணுவத்தினரும் பொலிஸாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன் ஹேதெனிய பிரதேசத்தில் முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமான ஹாட்வெயார் நிறுவனத்துக்கு கலகக்காரர்கள் பெற்றோல் குண்டு வீசியுள்ளனர். வர்த்தக நிலையத்தின் மேல்பகுதி தீப்பிடித்துள்ள நிலையில், உடனடியாக களத்துக்குச் சென்ற அமைச்சர் ரவூப் ஹக்கீம் தீயணைக்கும் படையினரை வரவழைத்து, தீ தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
கண்டி நிலவரம் நள்ளிரவு 1.30 am அப்டேட்...  கண்டி நிலவரம் நள்ளிரவு 1.30 am அப்டேட்... Reviewed by Madawala News on March 05, 2018 Rating: 5