கலவரத்தின் போது மிக கொடூரமாக தாக்கப்பட்ட கட்டுகஸ்தோட்டை பிரதேச முஸ்லிம் கிராமம். முடியுமானவர்கள் உதவவும்.


அஸ்ஸலாமு அலைக்கும் ,
ஹாரிஸ்பத்துவ பிரதேச சபைக்கு உட்பட்ட உல்லந்துபிடிய (கட்டுகஸ்தோட்டையில்
இருந்து ரனவன வீதியில் 5 கிலோமீட்டர்) என்று அழைக்கப்படும் சிறு கிராமம் மஸ்ஜுத் அஹமத் ஜும்ஆ பள்ளிவாயிலுடன் 65 முஸ்லிம் வீடுகளை உள்ளடக்கிய ( சுமார் 88 குடும்பங்கள் ) வசிக்கின்றனர் .
இக் கிராமமானது முழுமையான சிங்கள கிராமங்களை சூழ்ந்த கிராமம் ஆகும். கடந்த ( 7.03.2018) அன்று இனவாதிகளின் கலவரத்தின் போது (காலை 11 மணி முதல் மாலை 4.30 மணி வரை) இக்கிராமமும் மிக கொடூரமாக தாக்கப்பட்டது . இதில் பள்ளிவாயிலும் 3 வீடுகளும் முழுமையாக தீக்கறையாக்கப்பட்டது.
25 வீடுகள் கடுமையாக சேதப்படுத்தப்பட்டுள்ளது .
பாதிக்கப்பட்ட மக்கள் இன்று (09.03.2018) 3 ஆவது நாள் ஆகவும் அண்மை ஜும்ஆ பள்ளி பிரதேசமான என்டறுத்தென்னை முஸ்லிம் பாடசாலையில் அகதிகளாக பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இச்சேதத்தின் காரணமாக இவர்கள் தங்கள் வீடுகளுக்கு சென்று வாழும் நிலை இல்லை.
இவர்களை அன்றாட வாழ்க்கை நிலைக்கு திருப்புவதற்கு உடனடி உதவிகள் தேவைப்படுகின்றது . நலன்விரும்பிகள் , உதவி செய்ய விரும்புபவர்கள் பள்ளி நிர்வாகிகளுடன் தொடர்பு கொள்வதற்கு
தலைவர் : Mr. N Samsudeen (0812490007)
செயலாளர் : Mr.S.A.M Nasar (0773430341)
மேலதிக தொடர்புகளுக்கு : Mr. S.M Farhan ( 0772620803) 
வங்கிக்கிளை : AHAMMED JUMMAH MOSQUE ,
No - 48/3, ULLANDUPITIYA , WERALLAGAMA.
People’s bank 
Branch : katugastota 
089100196827670
ஜஸாக்கல்லாஹு ஹைரன்
தகவல் : ரிஸ்மி ராஸிக் , கலகெதர

கலவரத்தின் போது மிக கொடூரமாக தாக்கப்பட்ட கட்டுகஸ்தோட்டை பிரதேச முஸ்லிம் கிராமம். முடியுமானவர்கள் உதவவும். கலவரத்தின் போது  மிக கொடூரமாக தாக்கப்பட்ட கட்டுகஸ்தோட்டை பிரதேச முஸ்லிம் கிராமம். முடியுமானவர்கள் உதவவும். Reviewed by Madawala News on March 09, 2018 Rating: 5