எம்மை வீணான பிரச்சினையில் மாட்டிவிட சிலர் முயற்சிக்கிறார்கள் ..நாம் எவ்வளவு பொறுமையாக  நடந்துகொண்டாலும் எம்மை வீனான பிரச்சினைகளில் மாட்டிவிட  
சிலர் முயற்சி செய்கின்றார்கள் என ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.

அம்பாறை சம்பவம் தொடர்பில்  அவர் கூறியதாக நேற்று சமூக வலைகளில் ஒரு செய்தி பரவி இருந்த நிலையில் அதனை பல இணையதளங்கள் பிரசுரித்திருந்தன.

குறித்த செய்தியில் உணவில் கருத்தடை மாத்திரை கலந்து கொடுக்க முடியாது என அவர் கூறியதாக கூறப்பட்டிருந்த நிலையில் அந்த செய்தியை
அவர் மறுத்துள்ள அதேவேளை தான்  எவ்வளவு பொறுப்புடன் நடந்துகொண்டாலும் தம்மை வீனான பிரச்சினைகளில் மாட்ட சிலர்  முயற்சி செய்கின்றார்கள் இதனால் தனது உயிருக்கும் ஆபத்து ஏற்படலாம் என குறிப்பிட்டுள்ளார்.

போலியான தகவல்களை பரப்புபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் முறைப்பாட்டை பொதுபல சேனா செய்துள்ளது .
எம்மை வீணான பிரச்சினையில் மாட்டிவிட சிலர் முயற்சிக்கிறார்கள் ..  எம்மை வீணான பிரச்சினையில் மாட்டிவிட சிலர் முயற்சிக்கிறார்கள் .. Reviewed by Euro Fashions on March 03, 2018 Rating: 5