ஒரு மாவ‌ட்ட‌த்தை க‌ட்டுப்ப‌டுத்த‌ முடியாத‌ நீங்க‌ள் முழு நாட்டையும் எப்ப‌டி க‌ட்டுப்ப‌டுத்த‌ப்போகிறீர்க‌ள்?இந்த‌ க‌ல‌வ‌ர‌த்தின் பின்ன‌ணி ம‌ஹிந்த‌வா வேறு யாருமா என்ப‌து வேறு விட‌ய‌ம்.


ஆனால் நாம் முன் வைக்கும் கேள்விக‌ள்.அம்பாரையில் சிங்க‌ள‌ ப‌ய‌ங்க‌ர‌வாதிக‌ள் ஒண்ண‌ரை ம‌ணி நேர‌மாக‌ பேயாட்ட‌ம் ஆடிய‌ போது ர‌ணில் அர‌சால் த‌டுக்க‌ முடியாம‌ல் போன‌து ஏன்?

இர‌வு நேர‌ம் என்ப‌தால் ர‌ணில் தூங்கிவிட்டார் என்ப‌தை அறிந்தால் இன்னொரு நாள் தூக்க‌த்தில் வெளிநாட்டு ப‌டைக‌ள் நாட்டுக்குள் புகுந்து நாட்டை பிடித்தாலும் ஆச்ச‌ர்ய‌மில்லை. 

க‌ண்டியில் இற‌ந்த‌ சிங்க‌ள‌ வாலிப‌ரின் கிரியையை தொட‌ர்ந்து சும‌ண‌ தேர‌ர் த‌லைமையில் இன‌வாதிக‌ள் கூடிய‌ போது அர‌சு உட‌ன‌டியாக‌ க‌ள‌த்தில் இற‌ங்கி பாதுகாப்பை ப‌ல‌ப்ப‌டுத்தாம‌ல் விட்ட‌து ஏன்?

க‌ல‌வ‌ர‌ம் திக‌ன‌வில் ஆர‌ம்பித்த‌போது க‌ல‌க‌க்கார‌ர்க‌ளை சுட்டாவ‌து க‌ட்டுப்ப‌டுத்தியிருந்தால் க‌ல‌வ‌ர‌ம் தெல்தெனிய‌வுக்கு வ‌ந்திருக்காது. இது விட‌ய‌த்தில் ர‌ணில் அர‌சு ம‌வுன‌மாக‌ பார்த்துக்கொண்டிருந்த‌து ஏன்?

க‌ல‌வ‌ர‌ம் ஓரிரு நாட்க‌ள் அல்ல‌.ஐந்து நாட்க‌ள் கடந்து கடைசினாள்  ஹ‌லீம் எம் பி யின் கோட்டையான‌ அக்குற‌ணையும் எரியும் வ‌ரை க‌ட்டுப்ப‌டுத்த‌ முடியாத‌ அள‌வுக்கா ந‌ம‌து நாட்டின் பாதுகாப்பு உள்ள‌து?

ஒரு மாவ‌ட்ட‌த்தை க‌ட்டுப்ப‌டுத்த‌ முடியாத‌ நீங்க‌ள் முழு நாட்டையும் எப்ப‌டி க‌ட்டுப்ப‌டுத்த‌ப்போகிறீர்க‌ள்?

முஸ்லிம்க‌ள் ம‌ற‌திக்கார‌ர்க‌ள். இன்னும் சில‌ நாட்க‌ளில் அனைத்தையும் ம‌ற‌ந்து விட்டு ர‌ணிலுக்கு மாலை போடுவார்க‌ள். அதனால்தான்  இப்போதே இத்த‌கைய‌ கேள்விக‌ளை கேட்கிறோம்.

- உல‌மா க‌ட்சி
ஒரு மாவ‌ட்ட‌த்தை க‌ட்டுப்ப‌டுத்த‌ முடியாத‌ நீங்க‌ள் முழு நாட்டையும் எப்ப‌டி க‌ட்டுப்ப‌டுத்த‌ப்போகிறீர்க‌ள்?  ஒரு மாவ‌ட்ட‌த்தை க‌ட்டுப்ப‌டுத்த‌ முடியாத‌ நீங்க‌ள் முழு நாட்டையும் எப்ப‌டி க‌ட்டுப்ப‌டுத்த‌ப்போகிறீர்க‌ள்? Reviewed by Madawala News on March 11, 2018 Rating: 5