ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மருதமுனை மக்கள் சிலர் மீது பொலிஸ் மற்றும் இராணுவம் தாக்குதல்

பி.எம்.எம்.எ.காதர்
திகன  பிரதேசங்களில் சிங்களப் பேரினவாதிகளால் முஸ்லிம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும்
தாக்குதல்,மற்றும் பள்ளிவாசல்கள் உடைப்பு,கடைகள் எரிப்பு என்பவற்றைக் கண்டித்தும்,அரசு முஸ்லிம் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியும் (06-03-2018)மருதமுனையில் பூரண கர்த்தால், கடையடைப்பு, ஆர்ப்பாட்டம் என்பன நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டதாகத் தெரிவித்து பொலிஸ் மற்றும் இராணுவத்தால் பலர் தாக்கப்ட்டதுடன் மோட்டார் சைக்கிகளும் தாக்கிச் சேதப்படுத்தப்பட்டதுடன் பலர் பொலிசாரால் கைது செய்யப்படதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 
தாக்குதல்களுக்குள்ளான பலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுள்ளனர். பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட இந்தத் தாக்குதலை பொது மக்கள் வண்மையாக் கண்டித்துள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மருதமுனை மக்கள் சிலர் மீது பொலிஸ் மற்றும் இராணுவம் தாக்குதல்  ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மருதமுனை மக்கள் சிலர் மீது பொலிஸ் மற்றும் இராணுவம் தாக்குதல் Reviewed by Madawala News on March 06, 2018 Rating: 5