தொடரும் சிறுவர் இல்ல கொடுமை.. ஐந்து சிறுமிகளை வேட்டையடியவன் சிக்கினான்.


காலி - அபராதுவ பகுதியில் பாலியல் வன்புணர்வு சம்பத்துடன் தொடர்புடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார் என காவல் துறையினர் தெரிவிக்கின்றனர்.

குறித்த பகுதியில் அமைந்துள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் வசித்து சிறுமிகள் ஐவரை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியதாக தெரிவித்தே குறித்த நபர் கைது செய்ப்பட்டுள்ளார்.

15 வயதுடைய சிறுமிகள் இருவரும் 13 வயது சிறுமி ஒருவரும், 11 வயதுடைய சிறுமிகள் இருவரும் சுமார் கடந்த ஒரு மாத காலமாக இவ்வாறு பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு வந்துள்ளனர் என முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், சந்தேக நபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த காவல் துறையில் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடரும் சிறுவர் இல்ல கொடுமை.. ஐந்து சிறுமிகளை வேட்டையடியவன் சிக்கினான். தொடரும் சிறுவர் இல்ல கொடுமை.. ஐந்து சிறுமிகளை வேட்டையடியவன் சிக்கினான். Reviewed by Madawala News on March 05, 2018 Rating: 5