கண்டி கலவரம் ; பின்னனியில் “பேஸ்புக்” ஊடாக இனவாதம் பரப்பும் குழுதெல்தெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற கலவரத்தின் பின்னணியில் பேஸ்புக்கில் இனவாதம்
பரப்பும் குழு ஒன்றே இருந்துள்ளது என நீதி அமைச்சர் தலயா அதுகொரல குறிப்பிட்டார்.

பலங்கொடை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கருத்து வெளியிட்ட அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கருத்து வெளியிட்ட அவர்..

தெல்தெனிய பிரதேசத்தில் இடம்பெற்ற கலவரத்தின் பின்னணியில் பேஸ்புக்கில் இனவாதம் பரப்பும் குழு ஒன்றே இருந்துள்ளது. இதனை எவரும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் அதுவே உண்மையாகும் . திகனயில் துவங்கிய இந்த கலவரம் பின்னர் பேஸ் புக் வீரர்களால் பரப்பப்பட்டது.

நாம் அர்பணிப்புடன் செயலாற்றி இனவாதத்தை ஒழிக்கவேண்டும். இனிமேல் இந்த நாட்டில் இவ்வாறானதொரு  சம்பவம் இடம்பெறாது என்பதை நாம் உத்தரவாதம் அளிக்கமுடியும் என அவர் குறிப்பிட்டார்.
கண்டி கலவரம் ; பின்னனியில் “பேஸ்புக்” ஊடாக இனவாதம் பரப்பும் குழு கண்டி கலவரம் ; பின்னனியில்  “பேஸ்புக்” ஊடாக  இனவாதம் பரப்பும் குழு Reviewed by Madawala News on March 12, 2018 Rating: 5