முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை நடந்த பகுதிகளை பிரதமர் பார்வையிடாமை ஏமாற்றம் தருகிறது..-.. மெஹமட் அன்ஸிர்-

அம்பாறையில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறை தொடர்பில் வீரத்துடன் செயற்பட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தையரிமற்று காணப்படுவதாக குற்றம் சுமத்திய பிரதயிமைச்சர் ஹரீஸ், முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை நடந்த பகுதிகளை பிரதமர் பார்வையிடாமை ஏமாற்றம் தருவதாகவும் குறிப்பிட்டார்.


இதுதொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,


அம்பாறை வன்முறை பற்றி ஆராயும் கூட்டம் இன்று (04) ஓலுவில் துறைமுக சுற்றுலா விடுதியிலேயே நடைபெற்றது. அம்பாறையில்தான் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை நடைபெற்றது.அப்படியிருக்க ஏன் ஒலுவில் பகுதியில் கூட்டம் நடத்தினார்கள் என்பது விசித்திரமாக உள்ளது.


முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை நடந்த பகுதிகளை பார்வையிடாமல் பிரதமரை தடுத்ததில், மாவட்ட அமைச்சர் தயாமககேயின் பங்களிப்பு உள்ளது.இதன்மூலம் பிரதமர் தைரியமில்லாதவர் என்பது தெளிவாகியுள்ளது.பிரதமர் அம்பாறை சென்று வன்முறைப் பகுதிகளை பார்வையிடாமை ஏமாற்றம் தருகிறது.


அதேவேளை பிரதமருக்கு சொல்ல வேண்டியதை நாங்கள் தெளிவாக சொல்லியுள்ளோம்.


இனிமேல் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாதென பிரதமர் வாக்குறுதி வழங்கினார்.விரைவில் நஷ்டஈடு வழங்கப்படுமெனவும் குறிப்பிட்டார் எனவும் ஹரீஸ்  மேலும் குறிப்பிட்டார்.

முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை நடந்த பகுதிகளை பிரதமர் பார்வையிடாமை ஏமாற்றம் தருகிறது..  முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை நடந்த பகுதிகளை பிரதமர் பார்வையிடாமை ஏமாற்றம் தருகிறது.. Reviewed by Madawala News on March 04, 2018 Rating: 5