சமூகத்திற்காக சிராஸ் நூர்தீன் மீண்டும் வரவேண்டும் ...கடந்த காலங்களில் நாட்டில் எங்கெல்லாம் முஸ்லிம்களுக்கு பிரச்சினை வருகிறதோ
அங்கெல்லாம் ஓடோடி சென்று சமூகத்திற்காக அளப்பறிய சேவையாற்றிய வந்த சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ்  நூர்தீன் தலைமையிலான சட்டத்தரணிகள் குழு எமது சமூகத்திற்கு பணியாற்ற மீண்டும் வரவேண்டும் என பல்வேறு தரப்புகளில் இருந்தும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் அம்பாறை பள்ளிவாசல் தாக்கபட்டது அதற்காக  எவரும் கைது செய்யப்படாத நிலையில், அம்பாறை காசீம் ஹோட்டலை தாக்கிய விவகாரத்தில் கைதுசெய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களும் நேற்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

500 க்கும் அதிகமான  பெரும்பான்மை வாலிபர்களும், பௌத்த துறவிகளும் நீதிமன்றத்தினை சூழ்ந்திருந்த ஓர் பதட்டமான சூழலிலேயே நேற்றைய  வழக்கு விசாரணைகள் நடைபெற்றிருந்தது. சந்தேக  நபர்களுக்கு பிணை வழங்குவதற்கு போலீசார் விருப்பம் தெரிவித்ததனாலும், இது ஓர் தனிப்பட்ட சிறிய விடயம் போன்று கான்பிக்கப்பட்டதாலும் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டார்கள். 

இந்த வழக்கில் முஸ்லிம்கள் சார்பாக வழக்கமாக  இளம் சட்டத்தரணிகள் ஆஜராகி இருந்தார்கள்.(அவர்களின் துணிச்சலை நாம்  இந்த இடத்தில் பாராட்டியே  ஆகவேண்டும்.) சிரேஷ்ட  சட்டத்தரணிகள் இந்த வழக்கில் ஆஜராகி இருந்தால் சில நேரங்களில் சந்தேக நபர்களுக்கு பிணை வழங்குவது பற்றி நீதவான் மீள்பரிசீலனை செய்ய வாய்ப்பிருந்தது. 

இந்த வழக்கு விசாரணை மூலம் பள்ளிவாயல் ஒன்றை தாக்கிவிட்டு மிக இலகுவாக தப்பித்து விட முடியும் என்ற செய்தியை எதிர்காலத்தில்   பள்ளிவாயல்களை உடைக்கவுள்ள காடையர்களுக்கு கூறியுள்ளது. 

இந்த வழக்கில் ஸிராஸ் நூர்தீன் தலைமையிலான சட்டத்தரணிகள் குழு ஆஜராகி இருந்தால் பள்ளிவாயல் ஒன்றின் மீது கை வைத்து விட்டு மிக இலவாக தப்பித்துவிட முடியாது என்பதை நிச்சயமாக நாட்டின் சட்டதின் மூலம் இனவாதிகளுக்கு கற்றுக்கொடுத்திருப்பார்கள்.

கடந்த காலங்களில் ஞானசார தேரர் போன்றவர்களுக்கு எதிராக நீதிமன்றங்களில் நேருக்கு நேர் வாதாடிய துணிச்சல் மிக்க  ஸிராஸ் நூர்தீன் தலைமையிலான சட்டத்தரணிகள் குழுவை முடக்கி சமூகத்தின் குரலை நசுக்கிய பொலிடிகள் புரோக்கர்களே சமூகத்தின் காவளர்களாக வேஷம் போடும் பிணந்தின்னிகளே  இவற்றுக்கெல்லாம் நீங்கள் நிச்சயமாக இறைவனிடத்தில் பதில் சொல்லியே ஆகவேண்டும்..
சமூகத்திற்காக சிராஸ் நூர்தீன் மீண்டும் வரவேண்டும் ...  சமூகத்திற்காக சிராஸ் நூர்தீன் மீண்டும் வரவேண்டும் ... Reviewed by Euro Fashions on March 03, 2018 Rating: 5