அச்சத்தில் இரவை கழிக்கும் கண்டி முஸ்லிம்கள்..கண்டி மாவட்டத்தில் உள்ள முஸ்லிம்கள் கடும் அச்சத்தில் இரவை கழித்து வருகின்றனர்.

கண்டி கடுகஸ்தோட்டை பகுதியில் சில தாக்குதல் சம்பவங்கள் பதிவாகியிருந்த நிலையில் மெனிக்கின்னை பள்ளிவாயல் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.

இன்னும் சில இடங்களில் பல்வேறு  சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக தகவல் கிடைத்தவண்ணம் உள்ள  அதேவேளை எமக்கு கிடைத்துள்ள தகவல்களை 100 வீதம்  ஊர்ஜிதப்படுத்த முடியவில்லை.

மேலும் கண்டி மடவளை பகுதியில் பதற்றம் என கூறப்படும் தகவலில் எதுவித உண்மையில்லை. சற்றுமுன் வத்தேகம பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஐ பி ஜயசிங்க இதனை உறுதிப்படுத்தினார்.

அதே நேரம் அமைச்சர்கள் ஹக்கீம் , ரிஷாத் , ஹரீஸ் பாராளுமன்ற  உறுப்பினர்கள் இஷாக் ரகுமான் , முஜீப் ரகுமான் உள்ளிட்ட பலரும் தற்போது கண்டி நகரின் பல்வேறு பகுதிகளுக்கு விஜயம் செய்து அங்குள்ள மக்களுளை சந்தித்த  வண்ணம் உள்ளனர்.
அச்சத்தில் இரவை கழிக்கும் கண்டி முஸ்லிம்கள்.. அச்சத்தில் இரவை கழிக்கும் கண்டி முஸ்லிம்கள்.. Reviewed by Madawala News on March 05, 2018 Rating: 5