பிரதமரை அம்பாறை பள்ளிவாயலுக்கு வரவிடாமல் தடுத்தது தயா கமகே ...
நேற்று அம்பாறை விஜயம் செய்யவிருந்த பிரதமரை தடுத்து நிறுத்தியதிலும் அம்பாறை பள்ளிவாயல் உள்ளிட்ட  முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை நடந்த பகுதிகளை பார்வையிடாமல் பிரதமரை தடுத்ததில்,மாவட்ட அமைச்சர் தயாமககேயிற்கு பாரிய பங்களிப்பு உள்ளது என பிரதி அமைச்சர் ஹரீஸ் குறிப்பிட்டார்.


அம்பாறையில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறை தொடர்பில் வீரவசனம் பேசிய  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று தையரிமற்று காணப்படுவதாக குற்றம் சுமத்திய பிரதயிமைச்சர் ஹரீஸ், முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை நடந்த பகுதிகளை பிரதமர் பார்வையிடாமை ஏமாற்றம் தருவதாகவும் குறிப்பிட்டார்.


இதன்மூலம் பிரதமர் தைரியமில்லாதவர் என்பது தெளிவாகியுள்ளது.பிரதமர் அம்பாறை சென்று வன்முறைப் பகுதிகளை பார்வையிடாமை ஏமாற்றம் தருகிறது.


அதேவேளை பிரதமருக்கு சொல்ல வேண்டியதை நாங்கள் தெளிவாக சொல்லியுள்ளோம். தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை எமக்கு சாதகமாக பயன்படுத்தி 21 பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து பள்ளிவாயல் தாக்குதல் குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டார்.

பிரதமரை அம்பாறை பள்ளிவாயலுக்கு வரவிடாமல் தடுத்தது தயா கமகே ...  பிரதமரை அம்பாறை பள்ளிவாயலுக்கு வரவிடாமல் தடுத்தது தயா கமகே ... Reviewed by Madawala News on March 04, 2018 Rating: 5