உணர்ச்சி வசப்பட்டு அசிங்கமாக நடந்துக் கொள்வதனால் சிங்கள இனத்தை காப்பாற்ற முடியாது.



இன்னும் நாட்டில் மதம் சார்ந்த மோதல்கள் இருப்பதை கடந்த நாட்களில் அம்பாறையிலும்
இன்று தெல்தெனியாவிலும் ஏற்பட்ட அசம்பாவிதம் உறுதி செய்கிறது. 

இதற்கு முக்கிய காரணம் ஆரம்பத்திலே உடண்டி நடவடிக்கை எடுக்க பொலிஸ் மற்றும் சட்டம் சார்ந்த நிறுவனங்கள் தவறியதே!

அம்பாறை ஹோட்டல் சம்பவத்தில் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்யப்பட்டிருந்தால் இந்த அளவு பிரச்சனைகள் நீடித்திருக்காது.

இதே போன்று தெல்தெனிய சம்பவம் நடைபெற்று மூன்று நாட்கள் தாமதமாகியதால் சமூக வலை தளங்களில் பிரச்சனை தீவிரம் அடைந்ததால் இது போன்ற ஒரு சூழ் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். 

ஆனால் இது போன்ற சம்பவங்களால் சிங்கள இனம் பாதுகாக்கப்படும் என்று யாரேனும் நினைத்தால் அது ஒரு ஏமாற்றமே!

குறிப்பாக இந்த தருணத்தில் நமது இராணுவ வீரர்களை போர் குற்றவாளிகளாக்க சர்வதேச சமூகம் ஜினீவாவில் முயற்சி செய்து கொண்டிருக்கிறது. இது போன்ற சம்பவங்கள் அவற்றை உறுதிபடுத்தி விடும்.

கௌரவத்துடனும் புத்தி சாதூர்யத்துடனும் சிங்களவன் சிங்களவனாகவும் ஓற்றுமையாகவும் செயல் பட்டு சிங்கள் இனத்தை காப்பாற்ற வேண்டுமே தவிர இது போன்று உணர்ச்சி வசப்பட்டு அசிங்கமாக நடந்துக் கொள்வதனால் சிங்கள இனத்தை காப்பாற்ற முடியாது.

அத்துடன் முஸ்லிம் எதிர்ப்பலை உலகமெங்கும் உருவாகியுள்ளது. பொதுவாக நமக்கு இந்தியா, ஆப்கானிஸ்தான், சிரியா, இராக் போன்ற நாடுகளின் சம்பவங்கள் மாத்திரம் காணக்கிடைத்தாலும் மேலைய நாடுகளில் முஸ்லிம் விரோத சண்டைகள் நடைபெறுவதுடன் அண்மையில் ஜர்மன்,இத்தாலி, ஓஸ்ட் ரியா போன்ற நாடுகளில் நடைபெற்ற் தேர்தல்களின் போதும் ஸ்வீடன் ப்ரான்ஸ், நோர்வே பிரிட்டன் போன்ற நாடுகளின் தேர்தல்களின் போதும் இஸ்லாம் விரோத கட்சிகளுக்கு அன் நாடுகளின் ஆட்சி அதிகாரத்தை தீர்மானிக்கும் சக்தி கிடைப்பதை காணக் கூடியதாக உள்ளது.

இலங்கையிலும் சிங்கள மக்கள் மத்தியில் முஸ்லிம்களின் வளர்ச்சி தொடர்பில் பாதுகாப்பற்ற ஓர் அச்சம் இருப்பது இரகசியம் அல்ல. அதே போன்று ஒரு குறிப்பிட்ட சில அடிப்படைவாத குழுக்கள் பௌத்தர்கள் மட்டும் அல்லாது ஹிந்து கிறிஸ்தியானி அனைவர் மத்தியில் பாதுகாப்பற்ற எண்ணங்கள் வரும் விதத்தில் பகிரங்கமாகவும் மறைமுகமாகவும் செயல்படுவது தெளிவான ஒரு விடயமே!

கடந்த தேர்தலின் போது சில உள்ளூராட்சி மண்றங்களுக்கு முன் நின்ற பெண்கள் முஸ்லிம்களே அல்ல என்று கூறப்பட்ட அடிப்படைவாத பேச்சுக்கள் மற்றும் அவற்றுக்கு வழங்கப்பட்ட விளம்பரங்களும் அவற்றுக்கு எதிராக சட்டம் நடைமுறை படித்தப்படாத குறையும் நன்றாக விளங்கியது.

நடுநிலையான சமுதாயம் இதை தனிப்பட்ட முறையிலும் இரகசியமாகவும் எதிர்த்தாலும் ஒரு சமூகமாக பகிரங்கமாக எதிர்காதது இது போன்ற அடிப்படைவாதங்களுக்கு வலு சேர்க்கிறது என்றே கூற வேண்டும்.

அதனால் அனாகரீகமான அடிப்படைவாதம் எந்த சமுதாயத்திலிருந்து தலை தூக்கும் போது சட்டம் ஒரே விதத்தில் நடைமுறைப்படுத்தப்படுவதும் ஒரு சமுதாயமாக அது போன்ற தீய சக்திகளை முடக்குவதும் சிங்கள் முஸ்லிம் உட்பட நம் அனைவரின் கடமையாகும்.

சம்பிக ரனவகவின் முகநூலில் இருந்து 
05.03.2018 மாலை நேர பதிவு 
உணர்ச்சி வசப்பட்டு அசிங்கமாக நடந்துக் கொள்வதனால் சிங்கள இனத்தை காப்பாற்ற முடியாது.  உணர்ச்சி வசப்பட்டு அசிங்கமாக நடந்துக் கொள்வதனால் சிங்கள இனத்தை காப்பாற்ற முடியாது. Reviewed by Madawala News on March 06, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.