கொள்ளையர்கள் அட்டகாசம் - வயோதிபத் தம்பதிகள் மீது தாக்குதல் நடாத்தி கொள்ளை.


-பாருக் ஷிஹான் -

வீட்டில் தனிமையிலிருந்த வயோதிபத் தம்பதிகளை அதிகாலையில் கடுமையாகத் தாக்கி
வீட்டில் உள்ள நகைகள் மற்றும் பணத்தைக் திருடர்கள் கொள்ளையடித்துள்ளனர்.

கோப்பாய் நாவலர் பாடசாலைக்கு அருகில் உள்ள வீடு ஒன்றினுள் இன்று(3)  அதிகாலை கொள்ளையர்கள் வீட்டின் புகைக்கூடு வழியே உட்புகுந்ததுடன்  வீட்டில் இருந்த  வயோதிபத் தம்பதிகளை கட்டி வைத்து தாக்கியதாகத் தெரியவருகின்றது.

இதன் போது கொள்ளையர்களிடம்  தங்களிடம் நகைகள் பணம் இல்லை எனத் தெரிவித்தை அடுத்து கோபமடைந்த கொள்ளையர்கள்   சுவரில் தொங்கியிருந்த புகைப்படங்கள் மற்றும் அல்பங்களை எடுத்துப் பார்த்து மூதாட்டி அணிந்திருந்த தாலிக் கொடி மற்றும் நகைளைக் கேட்டு  தாக்கியுள்ளனர்.

 அத்துடன் வெளிநாட்டில் வாழும் பிள்ளைகள் வைத்தியர்களாகவும் பொறியியலாளராகவும் உள்ளதையும் கேட்டு அவர்களின் பணம் உங்களிடம் கட்டாயம் இருக்கும் என கூறியும் கொள்ளையர்கள் அந்த வயோதிபத் தம்பதியினரைத் தாக்கியுள்ளனர்.

இருப்பினும் அவர்களிடம் நகைகள் மற்றும் பெருமளவு பணம் வீட்டில் இல்லை என்பதை வீடு முழுவதும் சல்லடை போட்டுத் தேடிய பின் அறிந்த கொள்ளையர்கள் குறித்த மூதாட்டியின் காதை அறுத்து தோட்டை எடுத்ததுடன் தொலைபேசிகள் மற்றும் பத்தாயிரம் ரூபா அளவிலான பணம் என்பவற்றையும் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

வீட்டின் புகைக்கூட்டில் சிறுவன் ஒருவன் புகுவதற்கான இடமே காணப்பட்டுள்ளது. இருப்பினும் புகைக்கூடு வழியாக வீட்டினுள் நுழைந்த கொள்ளையன் உள் கதவைத் திறந்த பின் வெளியே உள்ளவர்களை கதவைத் திறந்து உள்ளே அழைத்தே கொள்ளையடித்துள்ளனர்.

இச் சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிசார் விசாரணைகளை மேற் கொண்டுள்ளனர். கொள்ளை நடந்த பகுதிக்கு அண்மையிலும் சில மாதங்களுக்கு முன் கொள்ளையர்கள் புகுந்து கொள்ளையடித்துள்ளனர்.


farook sihan
கொள்ளையர்கள் அட்டகாசம் - வயோதிபத் தம்பதிகள் மீது தாக்குதல் நடாத்தி கொள்ளை. கொள்ளையர்கள் அட்டகாசம் - வயோதிபத் தம்பதிகள் மீது தாக்குதல் நடாத்தி கொள்ளை. Reviewed by Euro Fashions on March 03, 2018 Rating: 5