தேர்தலுக்கு வெளியாகும் கோடிகள், நீதிக்கு பயன்படாமல் ஓடி ஒழிவது ஏன்?


தேர்தலுக்காக கோடிக்கணக்கில் செலவு செய்யும் தலைமைகளே அம்பாரையில்
நடந்த கலகக்காரர்களுக்கு எதிராக வழக்குபேசுவதற்கு ஒரு சதமும் செலவு செய்ய முன்வராதது ஏன்?



அம்பாரையில் நடந்த நீதிமன்ற விடயங்களில் சமூகபற்றுள்ள சட்டத்தரணிகள் தன்னந்தனியாக நின்று வாதாடியுள்ளார்கள். அவர்களும் இந்த இடத்தில் இல்லாது விட்டால் நிலைமை என்னவாகும் என்றாவது சிந்தித்தீர்களா?



தேர்தல் காலங்களில் வாக்குகளைக் கொள்ளையடிப்பதற்கு கள்வனைப்போல் வீடுவீடாக சென்று பணம் பட்டுவாடா செய்த முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களே, இப்படியான விடயங்களுக்கு உங்களால் பணம் செலவு செய்ய முடியாமல் இருப்பதற்கு காரணம் என்ன?



தரமான சட்டத்தரணிகளை களத்திலே இறக்கி இதற்கான தீர்வைப் பெற உங்களிடம் பணம் இல்லையா? மக்களை மடையர்களாக்கி கோடிகோடியாக சேர்த்தபணம் எங்கே?



தேர்தல் காலங்களில் வாக்குகளைக் கொள்ளையடிப்பதற்கு கெலியில் பறந்து திரிந்த உங்களுக்கு, இதற்காக பணம் செலவு செய்வதற்கு முடியாமல் போனது ஏன்?



முஸ்லிம் சமூகத்துக்காக இலவசமாக போராடிய சட்டத்தரணிகளைக்கூட மட்டம்தட்டி வீட்டுக்குள் முடக்கிவிட்டீர்கள். ஞானசாராவுக்கான வழக்குகளிலும், ரோகிங்கியா முஸ்லிம்களுக்கு நடந்த அநியாயத்துக்கு எதிரான வழக்குகளிலும், இதர வழக்குகளிலும் சமூக சிந்தனையோடு ஈடுபட்ட சட்டத்தரணிகளுக்கு, உங்கள் கட்சியினால் எவ்வளவு பணம் செலவு செய்யப்பட்டது என்றாவது கூறமுடியுமா?



இந்த நல்லாட்சியில் எவ்வளவோ அநியாயங்கள் முஸ்லிம் சமூகத்துக்கு எதிராக நடந்துள்ளது. அதற்கெல்லாம் எவ்வளவு பணம் செலவு செய்து தரமான சட்டத்தரணிகளை நியமித்து அதற்கான தீர்வைப் பெற்றுத்தந்தீர்கள்?



தேர்தல் காலங்களில் மட்டும் நாக்கூசாமல் ஒவ்வொரு மேடைகளிலும் கூறுவீர்கள். நாங்கள்தான் முஸ்லிம் சமூகத்தின் பாதுகாவலர்கள் என்று. அதனை அப்பாவி மக்கள் நம்பி வாக்களித்துவிட்டு ஏமாந்து நிற்கின்றார்கள். அவர்களுடைய  இயலாமையை பயன்படுத்தி உங்களது சதி நாடகத்தை அவர்களின் மேல் அரங்கேற்றிவிட்டு இலேசாக வெற்றியடைந்து சென்றுவிடுகின்றீர்கள். அதன் பின் நாங்கள் இத்தனை வாக்குகள் எடுத்தோம், இத்தனை உறுப்பினர்களைப் பெற்றோம் என்று பெருமை பேசி உங்களின் காரியத்தை சாதித்து விடுகின்றீர்கள். இதுதான் உங்களின் சமூகபற்றா?

ஆகவே முஸ்லிம் தலைவர்களே..அல்லாஹ்வுக்கு பயந்து கொள்ளுங்கள் கபுர் வீடு கண்முண்ணே உள்ளது என்பதை மறந்துவிடாதீர்கள். உங்களிடம் இருக்கும் கோடான கோடியில் ஒரு சில ரூபா பணத்தையாவது இதற்காக செலவு செய்யுங்கள். இல்லாது விட்டால் நாளை மஃஷரில் உங்களுக்கு எதிராக நாங்கள் இறைவனிடம் வாதாடுவோம் என்பதையும் எத்திவைக்க விரும்புகின்றோம்.

அல்லாஹ் போதுமானவன்..!

எம்.எச்.எம்.இப்றாஹிம்.

கல்முனை.
தேர்தலுக்கு வெளியாகும் கோடிகள், நீதிக்கு பயன்படாமல் ஓடி ஒழிவது ஏன்? தேர்தலுக்கு வெளியாகும் கோடிகள், நீதிக்கு பயன்படாமல் ஓடி ஒழிவது  ஏன்? Reviewed by Euro Fashions on March 03, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.