சிங்களப் பெண்களை விட முஸ்லிம் பெண்கள் அதிக பிள்ளைகளை பிரசவிக்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டு ஏற்கத்தக்கதா?


சிங்கள மதத்தைப் பின்பற்றும் பெண்களை விட இஸ்லாமிய மதத்தைப் பின்பற்றும் பெண்கள் அதிக
பிள்ளைகள் பெறுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு வலுத்துவரும் நிலையில், அதன் உண்மைத்தன்மையின் ஒரு சில பரிமாணங்களை ஆராய்ந்தால்,

முஸ்லிம் சமூகத்தில் பெண் பேராசிரியர்கள், கலாநிதிகள், முதுமாணி பட்டதாரிகள், இளமாணி பட்டதாரிகள் என்று கல்வி கற்ற பெண்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள். அதுபோலவே சிங்கள சமூகத்திலும் மிக அதிகமாக கல்வி கற்ற பெண்கள் இருக்கின்றார்கள். ஆனால், முஸ்லிம்களில் அநேகர் திருமணம் முடித்த பிறகே கல்வியை தொடர்ந்தவர்கள் அல்லது கல்வியைத் தொடரும் நிலையில் திருமணம் செய்தவர்கள்.


அவர்களுக்கு திருமணமோ, பிள்ளைப்பேறோ பெரிய தடையில்லை (ஆனால், இவ்விரண்டு காரணங்களாலும் கல்வியை கைவிட்டவர்களும் உளர்)
சிங்கள சமூகத்தில் கல்வி கற்றபின் பெறக்கூடிய கௌரவத்துக்கும், தொழில் ரீதியான கௌரவத்துக்கும் அதிக முக்கியத்துவம் கொடுப்பதால் கல்வியெல்லாம் கற்றபின் பிள்ளை பெற யோசிக்கிறார்கள். சிலர், பிள்ளைப்பேறு சமூக மட்டத்தில் தங்களுக்கு தாழ்வான அந்தஸ்தை கொடுத்துவிடும் என்று நினைக்கிறார்கள்.


என்னோடு படித்த, தொழில் செய்த பல சிங்கள சகோதரிகள் முப்பது கடந்தும் திருமணம் செய்யாமல், செய்தாலும் பிள்ளைப்பேறு இல்லாமல் இருந்தவர்கள் தான்.


இன்னுமொரு முக்கிய விடயம் நமது பெண்களின் கணவர்களோ, பெற்றோரோ, மாமா, மாமிகளோ பிள்ளைகளை வளர்ப்பதில் காட்டும் அதீத அக்கறை, நமது பெண் பிள்ளைகளின் மேல்படிப்பு, தொழில் முன்னேற்றம் என்பவற்றுக்குப் பக்கபலமாய் அமைகிறது (இது எல்லோருக்கும் அல்ல-என்றாலும் கணிசமான அளவு).

ஆனால், சிங்கள சமூகத்தில் நகர வாழ்க்கை, பெற்றோரின் குறைந்த உதவிகள், தனிக்குடித்தனம் போன்ற காரணிகளால் பிள்ளைகளை தாங்களே வளர்க்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தில் ஒரு பிள்ளையோடு சிலர் முடித்துக்கொள்கிறார்கள். இதனால் சிங்கள சகோதரிகள் நம்மவர்களைப்போல அதிக பிள்ளைகளைப் பெற தயங்குகிறார்கள்-பின்வாங்குகிறார்கள்.

இப்படி இருக்க முஸ்லிம்கள் அதிகம் பிள்ளை பெறுகிறார்கள் என்கிற வாதங்களை இத்தகு வாதங்களை முன்வைப்பவர்கள் மீள்பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும்.

(இது கல்விசார் விடயங்களை மட்டும் முன்னிறுத்தி எழுதப்பட்டுள்ளது. இதுபோல வெவ்வேறு காரணிகளும் இருக்கின்றன).

எப்.எச்.ஏ. ஷிப்லி
விரிவுரையாளர்
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகம்
சிங்களப் பெண்களை விட முஸ்லிம் பெண்கள் அதிக பிள்ளைகளை பிரசவிக்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டு ஏற்கத்தக்கதா? சிங்களப் பெண்களை விட முஸ்லிம் பெண்கள் அதிக பிள்ளைகளை பிரசவிக்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டு ஏற்கத்தக்கதா? Reviewed by Madawala News on March 11, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.