ஹக்கிம் காட்டிய மீன் கண்காட்சி மக்களுக்கு கிடைத்த ஏமாற்றம் .


அம்பாறை உகனையில் நடைபெறும் விமானப்படையின் கண்காட்சியை பார்வையிட வந்த பிரதமரை ஒலுவிலுக்கு
கூட்டி வந்து மீன் காட்சி காட்டிய ஹக்கிம் கடந்த வாரம் அம்பாறையில் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்ற கலவரத்தை பார்வையிட பிரதமரை அழைத்து செல்ல வில்லை

 ஹக்கிமுடன் அம்பாறை வரும் பிரதமர் கலவரம் நடந்த இடங்களை பார்வையிட்டு பாதிக்கப்பட்ட முஸ்லிம் மக்களுக்கு நல்ல ஒரு தீர்வை பெற்றுத்தருவார் என எதிர்பார்த்த அம்பாறை மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்

இவை மட்டுமல்ல மாணிக்கமடு சிலையை ஒரு வாரத்தில் அகற்றுவதாக பிரதமர் வாக்குறுதி என்று கடந்த ஒரு வருடத்துக்கு முதல் அறிக்கை விட்ட ஹக்கிம் அதை இது வரை நிறைவேற்றவில்லை ஆனால் இன்று சட்டம் ஒழுங்கு அமைச்சராக இருக்கும் பிரதமர் ஹக்கிமின் உயிர் தோழன் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் அம்பாறை வரும் நாளில் தான் கொடுத்த வாக்குறுதி காலம் கடந்தாலும் இன்று சட்ட ஒழுங்கு அமைச்சின் அதிகாரம் இருக்கும் போது மாணிக்கமடு சிலையை அகற்றுவார் என எதிர்பார்த்த அம்பாறை மக்கள் இன்று ஏமாற்றம் அடைந்துள்ளனர்

எனவே இவைகளை பார்த்தால் இந்த நாட்டில் முஸ்லிம் மக்கள் அடிபட்டு உதைபட்டு அழிந்தாலும் எனக்கு கவலையில்லை நான் அதிகாரம் கொண்ட அமைச்சராக சொகுசாக வாழ வேண்டும் டான்சி ராணி போன்ற பெண்களை கட்சியில் சேர்த்து கட்சியை வளர்க்க வேண்டும் என்ற கொள்கையில் ஹக்கிம் இருப்பதை அறிய முடிகிறது

எனவே அம்பாறை வந்த பிரதமரை சேதமாக்கப்பட்ட பள்ளிவாசலை காண்பிக்க முடியாத கோழைத்தனமாக அரசியல் செய்யும் ஹக்கிமை இன்னும் முஸ்லிம் சமுதாயம் தலைவன் என்று நாவினால் உச்சரிப்பதற்கு வெட்கப்பட வேண்டும்

அம்பாறை மக்களின் வாக்கு பிச்சையால் தான் வாழ்க்கையில் உயர்ந்து இருப்பதை கவனித்தில் கொண்டு இருந்தால் ஹக்கிம் கலவரம்  நடந்த உடனே அம்பாறைக்கு ஓடி வந்து இலங்கை முஸ்லிம்களின் முதுகெலும்பான அம்பாறையை பாதுகாக்க நடவடிக்கை எடுத்து இருப்பார் அப்படி  அவர் செய்தாரா ?இல்லை அவர் கட்சியில் டான்சி ராணியின் வரவை எதிர்பார்த்து கொழும்பில் இருந்துள்ளார்  இப்படியான தலைவனுக்கு அம்பாறை மக்கள் மீண்டும் ஆதரவு வழங்கி வரவேற்பு கொடுப்பது என்பது முஸ்லிம் சமுதாயத்துக்கு செய்யும் துரோகம் என்று தான் கூற வேண்டும்

வன்னியில் பிறந்தாலும் நிந்தவூரானின் இரத்தத்தில் உறவு கொண்ட பாசத்திலும் கல்முனையின் வீரமகன் மர்ஹும்  அஸ்ரப் அவர்களின் அரசியல் கொள்கையில் பாசம்  கொண்டதற்காகவும் அம்பாறை மக்கள் அரசியல் அதிகாரம் கொடுக்காவிட்டாலும் அந்த மக்களின் நலனில் அக்கறை கொண்டு வாழும்  அமைச்சர் றிசாத் அவர்கள் அம்பாறையில் பள்ளிவாசல் உடைக்கப்பட்ட சம்பவம் அறிந்து மிகவும் மனவேதனையுடன் விஷேட, விமானம் மூலம் அம்பாறை மண்னுக்கு ஓடி வந்தாரே அமைச்சர் றிசாத் அவர்தான் எமது சமுதாயத்துக்கு அஸ்ரப் அவர்களின் மறைவுக்கு பின் வந்த  அரசியல் தலைவன் என்பதை அம்பாறை கலவரம் மூலம் அல்லாஹ் புரியாதவர்களுக்கு புரிய வைத்துள்ளான் அல்ஹம்துலில்லாஹ்

அம்பாறை வந்த அமைச்சர் றிசாத் அவர்கள் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையால் இன்று அம்பாறையில் முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டு அவர்கள் கௌரவமாக வாழும் சூழ்நிலை ஏற்பட்டதால் கடந்த வெள்ளிக்கிழமை(02) பெருந்திறளான மக்களுடன் ஜும்மா தொழுகை நடைபெற்றது இந்த நிலை யார் உருவாக்கியது ஹக்கிமா ? இல்லை சமுதாயத்துக்காக அரசியல் செய்யும் அமைச்சர் றிசாத் அவர்களால் தான் முடிந்தது வேறு எந்த அரசியல்வாதியாலும்  முடியவில்லை என்பதை அம்பாறை மக்கள் இன்று சந்திக்கு சந்தி பேசுகின்றனர்

 எனவே அம்பாறை கலவரம் மூலம் எமது சமுதாயத்தை 18 வருடமாக ஏமாற்றி சொகுசா வாழும் ஹக்கிம் யார் என்பதை அம்பாறை மக்கள் அடையாளம் கண்டு விட்டனர் அதனால் ஹக்கிமுக்கு ஆதரவாக அம்பாறையில் இயங்கும் கூலிப்படைகளை  விரட்டி எமது சமுதாயத்துக்காக அரசியல் செய்யும் அமைச்சர் றிசாத் அவர்களுக்கு ஆதரவு வழங்கி எமது சமுதாயத்தை பாதுகாக்க முன் வராவிட்டால் முள்ளிவாய்க்காலில் தமிழ் சமுதாயம் அழிந்தது போல் எதிர்காலத்தில்  முஸ்லிம்  சமுதாயம் தென்கிழக்கில் அழிய வேண்டிய நிலை வரும் அதற்கு ஹக்கிமும் அவரது சகாபாக்களும் காரணமாக இருந்தார்கள்  என்பதை  நாம் மரணித்தாலும் எமது மண்னறை சொல்லும் என்பதை நாம்  மறந்துவிடக் கூடாது

-ஜெமீல் அகமட்-
ஹக்கிம் காட்டிய மீன் கண்காட்சி மக்களுக்கு கிடைத்த ஏமாற்றம் . ஹக்கிம் காட்டிய மீன் கண்காட்சி மக்களுக்கு கிடைத்த  ஏமாற்றம் . Reviewed by Madawala News on March 04, 2018 Rating: 5