கண்டி மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாதையில் படுத்த வண்ணம் ஆர்பாட்டம்.


கண்டி மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்கமகே பாதசாரிகள் கடவையில் படுத்து ஆர்பாட்டமொன்றில் ஈடுபட்டுள்ளார்.


நாவலப்பிட்டிய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆனந்த ராஜபைக்ஷவை  இடமாற்றம் செய்யக்கோரியே இன்று காலை 5 மணி முதல் இவ் ஆர்பாட்டத்தில் அவர் ஈடுபட்டுள்ளார்.

கண்டி அட்டன் பிரதான வீதியின் நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்தின் முன்னாள் உள்ள பாதசாரிகள் கடவையில்  படுத்தவண்ணமே மேற்படி ஆர்பாட்டம் இடம்பெற்றுவருவதால் குறித்த பகுதிக்கான போக்குவரத்து மாற்று பாதையினூடாக இடம்பெற்று வருவதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

ஆர்ப்பாட்டத்தையடுத்து சம்பவ இடத்திற்கு கம்பளை  மாவட்ட பொலிஸ் உயர்மட்ட அதிகாரிகள் வருகைத்தந்துள்ள போதிலும்  நீதியை சரியாக கடைப்பிடிக்காத பொறுப்பதிகாரியை இடமாற்றம் செய்யும் வரை ஆர்ப்பாட்டத்தை தொடர்வதாக பாராளுமன்ற உறுப்பினர் ஆனந்த அளுத்தகமகே தெரிவித்தார்.
கண்டி மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாதையில் படுத்த வண்ணம் ஆர்பாட்டம். கண்டி மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்  பாதையில்  படுத்த வண்ணம் ஆர்பாட்டம். Reviewed by Madawala News on March 09, 2018 Rating: 5