முஸ்லிம்களுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்களே விரட்டிய சம்பவம்.


அலதெனியவுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த இனந்தெரியாத நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்களே விரட்டியடித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மூன்று முச்சக்கர வண்டிகளில் வந்து தாக்குதலை நடத்தத் திட்டமிட்டபோது அங்கிருந்த முஸ்லிம் நபர் ஒருவர் ஜனா முதலாளியின் மகனுக்கு தொலைபேசியின் மூலம் அழைப்பு விடுத்ததை அடுத்து அவர் உடன் வருகை தந்துடன் அவருடன் நகர சிங்கள சகோதரர்களும் இணைந்து  அந்த இளைஞர்கள் விரட்டியடித்துள்ளனர்.

இப்பிரதேசத்திலுள்ள எந்த முஸ்லிம் கடைகளுக்கும் பாதிப்பு ஏற்படக் கூடாது என்று கூறி வந்தவர்களை ஏசி விரட்டியடித்துள்ளதாக அப்பிரதேச முக்கிய வர்த்தக ஒருவர் தெரிவித்தார்.

-இக்பால் அலி-
முஸ்லிம்களுக்கு தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்களே விரட்டிய சம்பவம். முஸ்லிம்களுக்கு  தாக்குதல் நடத்துவதற்காக வருகை தந்த நபர்களை நகரிலுள்ள சிங்கள மக்களே விரட்டிய சம்பவம். Reviewed by Madawala News on March 05, 2018 Rating: 5