அரசியலில் நீண்ட அனுபவமுடைய நான் என்னுடைய கடமைமையை திறம்பட செய்வேன் - புதிய சட்டம் ஒழுங்கு அமைச்சர் மத்தும பண்டார.


-கஹட்டோவிட்ட ரிஹ்மி -

அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார புதிய சட்டம், ஒழுங்கு அமைச்சராக இன்று (08)  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவியேற்றார். இந்நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் கலந்து கொண்டார். அமைச்சுப் பதவியேற்றவுடன் அமைச்சர் அவர்கள், கொழும்பு - ஹுணுபிடிய கங்காராமவிற்கு சென்று சமய நடவடிக்கைகளில் ஈடுபட்டார். அங்கு கங்காரமாதிபதி கலாநிதி கலபொட ஞானீஸ்ஸர தேரர், நாட்டில் தற்போது நிலவும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் சட்டம், ஒழுங்கு அமைச்சராக பதவியேற்றிருக்கும் ரஞ்சித் மத்தும பண்டார ஐக்கிய தேசிய கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் என்ற வகையில்  அந்த பதவிக்கு சாலப் பொறுத்தமானவர் என்றார்.

பிறகு ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போது, "கடந்த காலங்களில் இருந்து சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் இலங்கை மக்கள் என்ற அடிப்படையில் மிகவும் ஒற்றுமையாக வாழ்ந்தார்கள். என்றாலும் தற்போது சில அடிப்படைவாதிகள் மற்றும் இனவாதிகள் அந்த ஒற்றுமையினை இல்லாதொழிப்பதற்கான நிகழ்ச்சி நிரல்களை உருவாக்கி செயற்படுவதனால், நாட்டில் ஆரோக்கியமற்ற சூழல் உருவாகியுள்ளது" என்றார்.

மேலும் கருத்துத் தெரிவிக்கையில், "இந்த நெருக்கடி நிலைமையில் சட்டம், ஒழுங்கு அமைச்சை என்னிடம் அளித்த அதிமேதகு ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் நான் நன்றி தெரிவிக்கிறேன். அரசியலில் நீண்ட கால அனுபவமுடைய நான் இந்த வேலையை திறம்பட செய்வேன். சமய தலைவர்களிடம் மட்டுமல்லாது நாட்டு மக்களிடம் நான் வேண்டுவது, சிறிய தொகையினரான இனவாதிகள் மற்றும் அடிப்படைவாதிகளின் சூழ்ச்சிகளுக்கு, மிக்க பொறுமையுடனும் மிக்க புத்திசாலித்தனத்துடனும் முகங்கொடுக்க வேண்டும் என்று. எவ்வாறாயினும் மிக விரைவாக இந்த நிலைமையினை கட்டுப்படுத்தவும், நாட்டினுள் சமாதானத்தை உண்டாக்கவும் அவசியமான வேலைத்திட்டங்களை ஜனாதிபதியுடனும் பிரதமருடனும் பேசி முன்னெடுக்கவுள்ளேன்" என்றும் தெரிவித்தார்.
அரசியலில் நீண்ட அனுபவமுடைய நான் என்னுடைய கடமைமையை திறம்பட செய்வேன் - புதிய சட்டம் ஒழுங்கு அமைச்சர் மத்தும பண்டார. அரசியலில் நீண்ட அனுபவமுடைய நான் என்னுடைய கடமைமையை திறம்பட செய்வேன் - புதிய சட்டம் ஒழுங்கு அமைச்சர் மத்தும பண்டார. Reviewed by Madawala News on March 08, 2018 Rating: 5