அழிவு. அழிவு. மிக‌ சாதார‌ண‌ அழிவு அல்ல‌.


அழிவு. அழிவு. மிக‌ சாதார‌ண‌ அழிவு அல்ல‌. 83ம் ஆண்டு UNP ஆட்சிக்கால‌த்தில்
த‌மிழ் ம‌க்க‌ளுக்கெதிராக‌ க‌ட்ட‌விழ்க்க‌ப்ப‌ட்ட‌ க‌ல‌வ‌ர‌ம் த‌மிழ் ம‌க்க‌ளை சுமார் 100 வ‌ருட‌ம் பின் த‌ள்ளிய‌து. 2018 unp ஆட்சியில் முஸ்லிம்க‌ளுக்கெதிரான‌ க‌ல‌வ‌ர‌ம் முஸ்லிம்க‌ளை 200 வ‌ருட‌ம் பின் த‌ள்ளி விட்ட‌து. ப‌ல‌ ப‌ண‌க்கார‌ முஸ்லிம்க‌ள் அனைத்தையும் இழ‌ந்து நிற்கிறார்க‌ள். ப‌ல‌ பிச்சைக்கார‌ சிங்க‌ள‌வ‌ர் ஒரே நாளில் ல‌ட்சாதிப‌தியாய் ஆகியுள்ள‌ன‌ர்.

83ல் முத‌லில் த‌மிழ‌ர்க‌ளின் க‌டைக‌ளே தாக்க‌ப்ப‌ட்ட‌ன‌. பின்ன‌ர் வீடுக‌ள். அத‌ன் பின்ன‌ரே கொல்ல‌ப்ப‌ட்ட‌ன‌ர். அதே போன்று இப்போதும் முஸ்லிம்க‌ளின் வ‌ர்த்த‌க‌ம் பின்ன‌ர் ப‌ள்ளி பின்ன‌ர் வீடு. அத‌ன் பின் உயிர்க‌ள் மீதான‌ தாக்குத‌ல் வ‌ரும்.


நாட்டில் எந்த‌ பிர‌ச்சினைக்கும் போகாம‌ல் அடித்தாலும் உதைத்தாலும் ப‌ச்சை ர‌த்த‌ம் என‌ இருந்த‌ முஸ்லிம்க‌ளுக்கு ப‌ச்சை ஆட்சி மிக‌ப்பெரிய‌ ப‌ச்சை துரோக‌த்தை செய்து விட்ட‌து.

அண்மைய‌ உள்ளூராட்சி தேர்த‌லில் அடிவாங்கிய‌ unpக்கெதிராக‌ நாட்டில் கிள‌ர்ச்சிக‌ளும் ஊர்வ‌ல‌ங்க‌ளும் அர‌சை மாற்றும் போராட்ட‌ங்க‌ளும் ந‌ட‌க்க‌லாம் என்ப‌தை திசை திருப்புவ‌த‌ற்காக‌ முஸ்லிம்க‌ள் ப‌லி கொடுக்க‌ப்ப‌ட்டுள்ளார்க‌ள். இந்த‌ க‌ல‌வ‌ர‌த்தின் மூல‌ம் unp க்கு ப‌ல‌ ந‌ல‌ன்க‌ள் கிடைத்துள்ள‌ன‌.

தேர்த‌ல்க‌ளின் விளைவிலிருந்து நாட்டை திசை திருப்பி விட்ட‌மை. பாராளும‌ன்றில் ந‌ம்பிக்கையில்லா பிரேர‌ணை ஒத்தி வைக்க‌ப்ப‌ட்ட‌மை.
இக்க‌ல‌வ‌ர‌ங்க‌ளின் பின்னால் நாட்டின் பாதுகாப்பு, ச‌ட்ட‌ அமைச்ச‌ர் ம‌ஹிந்த‌ ராஜ‌ப‌க்ஷ இருப்ப‌தாக‌ முட்டாள் முஸ்லிம்க‌ளை ந‌ம்ப‌ வைத்த‌மை.

ஆக‌ இப்ப‌டியே unp யை விட்டால் முஸ்லிம்க‌ளின் பொருளாதார‌த்தை மீண்டும் க‌ட்டியெழுப்ப‌ இன்னும் 500 வ‌ருட‌ங்க‌ள் போக‌லாம்.

- முபாற‌க் அப்துல் ம‌ஜீத்
அழிவு. அழிவு. மிக‌ சாதார‌ண‌ அழிவு அல்ல‌. அழிவு. அழிவு. மிக‌ சாதார‌ண‌ அழிவு அல்ல‌. Reviewed by Madawala News on March 08, 2018 Rating: 5