இதுவரை 280 ​பேரை கைது செய்துள்ளோம்.


கடந்த 4ஆம் திகதி கண்டியை மையப்படுத்தி இடம்பெற்ற அசாதாரண சூழ்நிலையையடுத்து, 4ஆம் திகதியிலிருந்து நேற்று  (12) மாலை வரை கிடைக்கப் பெற்ற முறைபாடுகளுக்கு அமைய இதுவரை 280 ​பேர் வரை  கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர குறிப்பிட்டார்.

பொலிஸ் தலைமையகத்தில் இன்று  (12) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டப் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.


கடந்த 5,6,7 மற்றும் 8ஆம் திகதிகளில் அதிகம் முறைபாடுகள் கிடைத்த போதிலும், எமது அறிவிப்பின் பின்னர் ​கடந்த இரண்டு நாட்களில்  முறைபாடுகள்  மிகவும் குறைவாகவே கிடைக்கப்பெற்றதாகவும் குறிப்பிட்டார்.
இதுவரை 280 ​பேரை கைது செய்துள்ளோம். இதுவரை 280 ​பேரை கைது செய்துள்ளோம். Reviewed by Madawala News on March 13, 2018 Rating: 5